புதினம்
Articles
சுபீட்சமான இலங்கையைக் கட்டியெழுப்ப மைத்திரியும், ரணிலும் பதவி விலக வேண்டும்
புதினம் -
இலங்கையில் இஸ்லாமிய பயங்கரவாதிகளினால் பொதுமக்கள் மீது நடாத்தப்பட்ட மிலேச்சத்தனமான தாக்குதல்களை முறியடிக்கத் தவறிய இலங்கை ஜனாதிபதியும், பிரதமரும் பதவி விலக வேண்டும். இதன் மூலமே சுபீட்சமான இலங்கையை எதிர்காலத்தில் கட்டியெழுப்ப முடியும். நாட்டின் பாதுகாப்பு அமைச்சராக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனா இருக்கிறார். விடுதலைப்புலிகளுடனான போர் இடம்பெற்றுக்கொண்டிருக்கும்போது பலமுறை பதில் பாதுகாப்பு அமைச்சராக இருந்தவர். அனுபவம்...
National news
பாதுகாப்பு செயலாளராக முன்னாள் ராணுவத் தளபதி
புதினம் -
இலங்கையின் பாதுகாப்பு செயலாளராக இளைப்பாறிய முன்னாள் ராணுவத் தளபதி ஜெனரல் சாந்த கோட்டேகொட ஜனாதிபாதியால் நியமிக்கப்பட்டுள்ளார்.
Local news
இஸ்லாமிய பெண்கள் இன்றிலிருந்து முகத்தை மறைக்கத் தடை
புதினம் -
இலங்கையில் இன்றிலிருந்து (29/04) இஸ்லாமிய பெண்கள் முகங்களை மறைக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு காரணங்களை முன்னிலைப்படுத்தி இந்த தடை அமுலுக்கு வருகிறது. நாட்டில் அமுல்படுத்தப்பட்டுள்ள அவசரகால சட்டத்திற்கமைய ஜனாதிபதி இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.
National news
நான் ஜனாதிபதியானால் இஸ்லாமிய பயங்கரவாதத்தை இல்லாதொழிப்பேன் – கோத்தபாய ராஜபக்ச
புதினம் -
அமெரிக்க குடியுரிமையை விடுத்து இலங்கை குடிமகனாக வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடப்போவதாக கோத்தபாய ராஜபக்ச சர்வதேச ஊடகத்திற்கு தெரிவித்துள்ளார். அத்துடன், தான் ஜனாதிபதியானால் இலங்கைப் புலனாய்வுப் பிரிவை மீள்கட்டியெழுப்பி, மக்களை வேவு பார்ப்பதன் மூலம் இஸ்லாமிய பயங்கரவாதத்தை முற்றாக இல்லாதொழிப்பேன் எனவும் குறிப்பிட்டுள்ளார்.இதேவேளை, 2011ல் தான் உருவாக்கிய 5000 பேர் கொண்ட புலனாய்வு கட்டமைப்பை தற்போதுள்ள...
National news
இஸ்லாமிய மதவாத அமைப்புகளான NTJ மற்றும் JMI தடை செய்யப்பட்டது
புதினம் -
இலங்கை ஜனாதிபதி தனக்குள்ள அதிகாரத்திற்கமைய இஸ்லாமிய மதவாத அமைப்புகளான NTJ மற்றும் JMIஐ இலங்கையில் தடை செய்துள்ளார். தேசிய தவ்ஹீத் ஜமாத் (NTJ) மற்றும் ஜமாத்தே மில்லது இப்ராஹிம் செய்லானி (JMI) ஆகிய இஸ்லாமிய மதவாத அமைப்புகளே தடை செய்யப்பட்டுள்ளதுடன், அவற்றின் சொத்துக்களையும் முடக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்துள்ளது. NTJ மற்றும் JMI ஆகிய அமைப்புக்கள்...
Articles
மஸ்கெலியா பள்ளிவாசலில் 47 கத்திகள் மீட்பு. வைத்தது யார் ???
புதினம் -
நுவரெலியா மாவட்டம் மஸ்கெலியா பிரதேசத்திலுள்ள பள்ளிவாசல் ஒன்றில் 47 கத்திகள் மற்றும் கோடரிகள் மீட்கப்பட்டுள்ளதாக இலங்கை காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இதனுடன் தொடர்புபட்டதாக ஒருவரை கைது செய்துள்ளதாகவும், அவரை நாளை (28/04) நீதிமன்றில் முன்னிலைப்படுத்தவுள்ளதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இலங்கையில் தற்போது ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலையில், நாடாளாவியரீதியில் இடம்பெற்றுவரும் தேடுதல் நடவடிக்கைகளின் போது, வெடி பொருட்கள், கத்திகள்,...
National news
கொழும்பு மாநகரசபை உறுப்பினர் தாஜுதீன் உட்பட மூவர் கைது
புதினம் -
கொழும்பு கொம்பனித்தெரு பள்ளிவாசலில் 46 வாள்கள் மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பாக, கொழும்பு மாநகரசபை ஐ.தே.க உறுப்பினர் தாஜுதீன் உட்பட மூவர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.46 வாள்களுடன், 15 கத்திகள் மற்றும் 25 ராணுவ சீருடைகள் என்பனவும் கைப்பற்றப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
Local news
பாடசாலைகள் மற்றும் பல்கலைக்கழகங்கள் மே 6ம் திகதி ஆரம்பமாகும்
புதினம் -
இலங்கையிலுள்ள அனைத்து பாடசாலைகள் மற்றும் பல்கலைக்கழகங்கள் வரும் மே மாதம் 6ம் திகதி ஆரம்பமாகும் என தேசிய பாதுகாப்பு சபை கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது. நாட்டில் நிலவும் அசாதாரண சூழ்நிலையைக் கருத்திற்கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. வரும் 29ம் திகதி பாடசாலைகள் மீண்டும் ஆரம்பமாகும் என முன்னர் அறிவிக்கப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
Local news
சாய்ந்தமருது முற்றுகையில் 6 சிறுவர்கள் உட்பட 15 பேர் உயிரிழப்பு, இருவர் தப்பியோட்டம்
புதினம் -
கிழக்கு மாகாணம் சாய்ந்தமருது பிரதேசத்தில் இஸ்லாமிய பயங்கரவாதிகளின் மறைவிடமொன்றை விசேட அதிரடிப்படையினர் முற்றுகையிட்டபோது இருபகுதினருக்குமிடையில் துப்பாக்கி சமர் இடம்பெற்றதாகவும், அதனைத் தொடர்ந்து வீட்டினுள் இருந்தவர்கள் குண்டுகளை வெடிக்க வைத்ததாகவும் காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.இந்த சம்பவத்தில் 15 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. காவல்துறையினருக்கோ, விசேட அதிரடிப்படியினருக்கோ எவ்வித சேதங்களும் ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. குண்டு வெடிப்புகள் இடம்பெற்ற...
Local news
சாய்ந்தமருது பிரதேசத்தில் இஸ்லாமிய பயங்கரவாதிகளுடன் துப்பாக்கி சண்டை
புதினம் -
நாடளாவியரீதியில் தொடங்கப்பட்டுள்ள பாரிய தேடுதல் நடவடிக்கையின் ஒரு பகுதியாக கிழக்கு மாகாணம் சாய்ந்தமருது பிரதேசத்தில் இடம்பெற்ற தேடுதலின்போது இஸ்லாமிய பயங்கரவாதிகளுடன் துப்பாக்கி சண்டை ஓன்று இடம்பெற்றுள்ளது. விசேட அதிரடிப்படையினர் சந்தேகத்திற்கிடமான ஒரு கட்டிடத்தை சோதனை செய்ய முற்பட்டபோது அங்கிருந்த இஸ்லாமிய பயங்கரவாதிகள் துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டனர். இதைத் தொடர்ந்து இரு பகுதியினருக்குமிடையில் கடும் துப்பாக்கி...
About Me
Puthinam NEWS brings you the latest news and the global headlines in Tamil language.
1130 POSTS
0 COMMENTS
Latest News
மாவையின் உடல் தீயுடன் சங்கமம்
தமிழரசுக் கட்சியின் சிரேஷ்ட தலைவரும், முன்னாள் யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜாவின் இறுதிக் கிரிகைகள் இன்று (02/02) இடம்பெற்று, பூதவுடல் மாவிட்டபுரம் இந்து...
