கிழக்கு மாகாண ஆளுநரை பதவி நீக்கச் சொல்லி திருகோணமலையில் ஹர்த்தால்

கிழக்கு மாகாணம் திருகோணமலையில் இன்று (10/05) ஹர்த்தால் அனுஷ்டிக்கப்படுகிறது.

கிழக்கு மாகாண ஆளுநரை ஹிஸ்புல்லாவை பதவி நீக்கச் சொல்லி இந்த ஹர்த்தால் இடம்பெறுகிறது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனாவின் மிக நெருங்கிய சகாவான ஹிஸ்புல்லா, இஸ்லாமிய பயங்கரவாதிகளுடன் தொடர்புகளைக் கொண்டிருந்தார் என பரவலாக குற்றச்சாட்டுக்கள் எழுந்தபோதும், எந்த நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ஹிஸ்புல்லாவை பதவி நீக்கச் சொல்லி, இலக்கை சுதந்திரக் கட்சிக்குள்ளும் கடுமையான அழுத்தங்கள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனாவிற்கு எதிராக கிளம்பியுள்ளதாக தெரியவருகிறது.

தொடர்புடைய செய்திகள்
உங்கள் கருத்து
Loading...