சரத் பொன்சேகாவை நியமிக்கக்கோரி ஜனாதிபதியிடம் வேண்டுகோள்

இலங்கையின் தற்போதைய பாதுகாப்பு நிலையைக் கருத்திற்கொண்டு, முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவை சட்ட ஒழுங்கு அமைச்சராக நியமிக்கக்கோரி, சில மூத்த அமைச்சர்கள் உட்பட ஐக்கிய தேசிய முன்னணியின் 59 பாராளுமன்ற உறுப்பினர்கள் ஜனாதிபதியிடம் எழுத்து மூலம் வேண்டுகோள் விடுக்க உள்ளனர்.

ஆரம்பத்திலிருந்தே சரத் பொன்சேகாவின் நியமனத்தை மறுத்துவரும் ஜனாதிபதி, இம்முறையும் இந்த வேண்டுகோளை நிராகரிப்பார் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்
உங்கள் கருத்து
Loading...