யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத் தலைவர், செயலாளர் இராணுவத்தால் கைது. 16ம் திகதிவரை விளக்கமறியல்.

யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத் தலைவர் M.திவாகரன் மற்றும் செயலாளர் S.கபில்ராஜ் ஆகியோர் நேற்று (03/05) இராணுவத்தால் கைது செய்யப்பட்டு கோப்பாய் காவல்துறையினரிடம் கையளிக்கப்பட்டனர். பின்னர் மாலை யாழ் நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்தியபோது, அவர்களை வரும் 16ம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க நீதிவான் உத்தரவிட்டார்.

நேற்று காலை யாழ் பல்கலைக்கழகத்தை சுற்றிவளைத்த இராணுவம் மற்றும் சிறப்பு அதிரடிப்படையினரை, நாட்டின் பாதுகாப்புக்கருதி பல்கலைக்கழக வளாகங்களை சோதனை செய்ய மாணவர்கள் அனுமதித்திருந்தனர்.

இதன்போது மாணவர் ஒன்றியத்தின் அறையிலிருந்து தேசிய தலைவரின் படங்களும், சில பதாதைகள் மற்றும் மாவீரர்களின் ஒளிப்படங்களை இராணுதவத்தினர் எடுத்திருந்தனர். இதனைக் காரணம்காட்டி மாணவர் ஒன்றியத் தலைவர், செயலாளரை பயங்கரவாத தடைச்சட்டத்தின்கீழ் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

இலங்கையின் தற்போதைய நிலைமையை தமக்கு சாதகமாகப் பயன்படுத்தி சிங்கள பேரினவாத அரசு தமிழர்களுக்கும் பயமூட்டப்பார்க்கிறது.

தமிழர்கள் சந்ததித்திராத பயங்கரவாதச் தடைச் சட்டங்களுமில்லை, விசாரணைகளுமில்லை என்பதை சிங்கள பேரினவாத அரசு புரிந்துகொள்ளவேண்டும்.

இங்கு கொடுமையான விடயம் என்னவெனில், சில தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களும் இதை தமக்கு சாதகமாகப் பயன்படுத்த முனைவதாக தெரியவருகிறது.

தொடர்புடைய செய்திகள்
உங்கள் கருத்து
Loading...