பள்ளிவாசல்களில் வாள்களை எடுப்பவர்களால் ஏன் ஆவா குழுவிடம் எடுக்க முடியாமாலுள்ளது?

வாள்கள் மற்றும் கிரிஸ் ரக கத்திகள் வைத்திருப்பவர்கள் அவற்றை அருகிலுள்ள காவல் நிலையங்களில் இன்று (05/05) ஒப்படைக்குமாறு இலங்கை காவல்துறையினர் கேட்டுள்ளனர்.

அவசரகால சட்டத்தைப் பயன்படுத்தி தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொண்டுவரும் படையினர் மற்றும் காவல்துறையினர் பல இடங்களில் வாள்கள் மற்றும் ஆயுதங்களை மீட்டு வருகின்றனர்.
இவற்றில் பழைய இரும்பிற்கு வேண்டப்பட்டிருந்த வெற்று தோட்டாக்கள் மற்றும் எறிகணைகளும் அடங்கும்.

அவசரகாலச் சட்டம் இயற்றப்பட்டு ஒரு வாரத்திற்கும் மேலாகிவிட்டபோதும் யாழ்ப்பாணத்தில் ஆவா குழுவின் ஒரு வாளைக்கூட காவல்துறையினர் கைப்பற்றவில்லை.

பல்கலைக்கழகத்திற்குள் சென்று கைதுகளை மேற்கொள்பவர்களால், காவாலிகள் வைத்திருக்கும் வாள்கள், கத்திகள் போன்றவற்றை இன்னும் கைப்பற்ற முடியவில்லை என்பது சிங்கள படைத்தரப்பினர்மீது பலத்த சந்தேகங்களை ஏற்படுத்துகின்றது.

தொடர்புடைய செய்திகள்
உங்கள் கருத்து
Loading...