இலங்கையில் 11 மாதங்களில் 44 புகையிரத தடம் புரள்வுகள்

இலங்கையில் கடந்த 11 மாதங்களில் 44 புகையிரத தடம் புரள்வுகள் இடம்பெற்றுள்ளதாக இலங்கை புகையிரத திணைக்களம் தெரிவித்துள்ளது.

நாட்டில் ஏற்பட்டுள்ள டொலர் பற்றாக்குறையால் புதையிரத திணைக்களம் பல வழிகளிலும் பாதிப்பட்டுள்ளதாகவும், குறிப்பாக புகையிரத உதிரிப்பாகங்கள் மற்றும் தேவையான இதர பொருட்களை கொள்வனவு செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது எனவும் புகையிரத தொழிற்சங்கங்கள் தெரிவிக்கின்றன.

புகையிரதங்கள் தடம் புரள்வதற்க்கு சில புகையிரத பாதகைளும், சில புகையிரதங்கள் பழுதடந்திருப்பதுமே முக்கிய காரணம் எனவும் தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளன.

இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிக்குப் பின்னர் எரிபொருட்களின் விலையேற்றம் காரணமாக, பேருந்து கட்டணங்கள் பல மடங்கு அதிகரித்துள்ளது. இதனால் மக்கள் பேருந்து சேவைகளைத் தவிர்த்து, புகையிரத சேவைகளையே அதிகம் பயன்படுத்துகிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Puthinam NEWS WhatsApp Channel

Latest articles

Similar articles