56,000 சிறுவர்கள் போஷாக்கின்மை நிலையில் – UNICEF

இலங்கையில் 22.6 இலட்சம் சிறுவர்களுக்கு அவசர மனிதாபிமான உதவிகள் தேவைப்படுவதாக ஐக்கிய நாடுகள் சபையின் சிறுவர்களுக்கான அமைப்பான யுனிசெப் (UNICEF) தெரிவித்துள்ளது.

நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி மற்றும் பணவீக்கம் போன்றன குழந்தைகள் மற்றும் சிறுவர்களின் பாதிப்பிற்கு முக்கிய காரணமாக இருப்பதாக யுனிசெப் தெரிவித்துள்ளது.

56,000 இற்கும் மேற்பட்ட சிறுவர்கள் மிக மோசமான போஷாக்கின்மை நிலையிலுள்ளனர் என தெரிவித்துள்ள UNICEF நிறுவனம், அவர்களில் ஐந்து வயதிற்குட்பட்டவர்களுக்கு விரைவான மனிதாபிமான உதவிகள் மற்றும் சிகிச்சைகள் தேவைப்படுவதாகவும் தெரிவித்துள்ளது.

இதேவேளை 48 இலட்சம் பிள்ளைகளுக்கு கல்வி கற்றலுக்கான வசதிகள் தேவைப்படுவதாகவும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

Latest articles

Similar articles