புதினம்
National news
இலங்கையில் சமூக தொற்றாக மாறும் கொரோனா, ஒரே நாளில் 865 தொற்றாளர்கள்
புதினம் -
மஹிந்த அரசின் பெரும் செல்வாக்கைப் பெற்ற பிராண்டிக்ஸ் ஆடை உற்பத்தி நிறுவனம், கொரோனா விதிமுறைகளைக் கடைப்பிடிக்காமையினால், இந்தியாவிலிருந்து கொரோனா தொற்று இலங்கைக்குள் பரவியுள்ளது.கம்பஹாவில் ஆரம்பித்த தொற்று, இன்று நாடு முழுவதும் பரவி சமூகத் தொற்றாக உருவெடுத்துள்ளதாக இலங்கை அரச மருத்துவர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. நேற்று (23/10) மட்டும் 865 தொற்றாளர்கள் இனம் காணப்பட்டுள்ளனர்....
National news
20வது அரசியலமைப்பு திருத்தம் நிறைவேற்றம்
புதினம் -
இலங்கை ஜனாதிபதியின் நிறைவேற்று அதிகாரத்தினைப் பலப்படுத்தும் வகையில் உருவாக்கப்பட்ட 20வது அரசியலமைப்பு திருத்தம் எதிர்பார்த்தைப்போலவே பெரும்பான்மை பலத்துடன் நிறைவேற்றப்பட்டுள்ளது.திருத்தத்திற்கு ஆதரவாக 156 வாக்குகளும், எதிராக 65 வாக்குகளும் அளிகப்பட்டிருந்தன.வரும் காலங்களில் இலங்கையின் அரசியல் களத்தில் பல கடும்போக்கான நிகழ்வுகளை எதிர்பார்க்க முடியும். இதேவேளை அராசாங்கத்திற்குள்ளேயும் சில முரண்பாடுகளை எதிர்பார்க்கலாம் என அரசியல் ஆய்வாளர்கள் எதிர்வுகூறியுள்ளனர்.
National news
கம்பஹா மாவட்டதிற்க்கு மட்டும் ஐந்து நாட்கள் ஊரடங்கு
புதினம் -
இலங்கையின் கம்பஹா மாவட்டத்திற்கு மட்டும் இன்று (21/10) இரவு பத்து மணிமுதல் வரும் 26ம் திகதி காலை ஐந்து மணிவரை ஐந்து நாட்கள் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்படுவதாக இலங்கையின் இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.இருப்பினும், கம்பஹா மாவட்டத்தினூடாக வேறு மாவட்டங்களுக்கு செல்லும் போக்குவரத்திற்கு எவ்வித தடையுமில்லை என தெரிவித்த இராணுவத் தளபதி,...
National news
இன்னுமொரு ஆடைத் தொழிற்சாலை ஊழியருக்கும் கொரோனா
புதினம் -
கம்பஹா மாவட்டத்திலுள்ள திஹாரிய பிரதேசத்தில் அமைந்துள்ள "ஹெல குளோத்திங்" எனும் ஆடைத் தொழிற்சாலையில் பணியாற்றும் ஊழியர் ஒருவருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.இந்த ஊழியரின் மனைவி மினுவாங்கொட ஆடைத் தொழிற்சாலையில் பணிபுரிபவராவார். "ஹெல குளோத்திங்" நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தமது திஹாரிய ஆடைத் தொழிற்சாலை மறு அறிவித்தல்வரை மூடப்படிருக்கும் என தெரிவித்துள்ளது. மேலும் தொற்றாளருடன் நெருங்கிய...
National news
இலங்கையில் நேற்று மட்டும் 103 கொரோனா தொற்றாளர்கள்
புதினம் -
இலங்கையில் நேற்று (10/10/20) மட்டும்103 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். நாட்டின் பல பாகங்களிலும் தொற்றாளர்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதால் இது சமூகத் தொற்றாக மாறக்கூடிய சந்தர்ப்பமுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இலங்கை அரசு நிலமை கட்டுப்பாட்டிற்குள் இருப்பதாக தெரிவித்துள்ளபோதும் தொற்றாளர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்தவண்ணமே உள்ளது. இதுவரை மொத்த தொற்றாளர்களின் எண்ணிக்கை 4,628 ஆக உயர்ந்துள்ளது.
National news
கொழும்பு வைத்தியசாலை சிற்றூழியர்கள் மூவருக்கு கொரொனா தொற்று
புதினம் -
கொழும்பு தேசிய வைத்தியசாலையில் பணியாற்றும் சிற்றூழியர்கள் மூவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து மூன்று நோயாளர்கள் விடுதியும் ஒரு சத்திரசிகிச்சைக் கூடமும் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.மற்றைய ஊழியர்கள், வைத்தியர்கள் மற்றும் தாதியர்கள் கொரோனா சோதனைக்கு உட்படுத்தப்பட்டார்களா என்பதுபற்றி எவ்வித தகவல்களையும் அரசு வெளியிடவில்லை. இலங்கையின் பிரதான வைத்தியசாலையான கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பகுதியளவிலான தற்காலிக முடக்கம்...
Local news
தடுமாறும் இலங்கை அரசு, தொற்றாளர்களின் எண்ணிக்கை 832 ஆக உயர்வு
புதினம் -
1400 பேருக்கு மேல் தொழில் புரியும் கம்பஹா ஆடைத் தொழிற்சாலையில் பரவ ஆரம்பித்த கொரோனா, தற்போது 832 பேருக்கு தொற்றியுள்ளது. ஒரு நாளில் மட்டும் 729 பேருக்கு வைரஸ் தொற்றியுள்ளமை மற்றும் அறிகுறிகள் எதுவுமின்றி விரைவாக பலருக்கு வைரஸ் பரவியுள்ளமை போன்றவற்றால் இலங்கையின் சுகாதாரத் துறையினர் கடும் குழப்பத்தில் உள்ளனர். மேலும் நோய்த் தொற்றிற்கான...
Local news
கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 569 ஆக உயர்வு
புதினம் -
கம்பஹா மினுவாங்கொடை ஆடைத் தொழிற்சாலையில் கொரோனா நோய் தொற்றாளர்களின் எண்ணிக்கை 569ஆக உயர்ந்துள்ளது. நோய்த் தொற்றாளர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் எனவும் கருதப்படுகிறது. தொழிற்சாலை ஊழியர்களின் இரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டு கொரோனா பரிசோதனை தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இருப்பினும் பல தொழிலாளர்கள் விடுமுறையில் சென்றுள்ளதால் நிலமை சற்று மோசமடையலாம் என அஞ்சப்படுகிறது. கொரோனா தொற்றிற்கான அறிகுறிகள் தென்படுவதாக...
கொரோனா வைரஸ் COVID-19
பரிசோதனை செய்யப்பட்ட 150 பேரில், 69 பேருக்கு கொரோனா தொற்று
புதினம் -
இலங்கையின் கம்பஹா மாவட்டத்தில் உள்ள மினுவாங்கொட பிரதேசத்தில் 69 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.ஆடைத் தொழிற்சாலையொன்றில் பணி புரியும் பெண் ஒருவருக்கு நேற்றைய தினம் (04/̀10) கொரொனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து முதற்கட்டமாக 150 ஊழியர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் 69 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானது. இது...
World News
அமெரிக்க ஜனாதிபதிக்கு கொரோனா
புதினம் -
அமெரிக்காவின் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் மற்றும் அவரது மனைவி மெலினா டிரம்ப் ஆகியோர் கொரோனா நோய்த் தொற்றுக்குள்ளாகியுள்ளனர். இதன் காரணமாக அவர்கள் இருவரும் உடனடியாக தனிமைப்படுத்தலுக்கு உள்ளாவதாக அறிவித்துள்ளனர்.74 வயதான டொனால்ட் டிரம்ப் வரும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுகிறார். இதற்கான பிரச்சாரப் பணிகளில் மிகவும் சுறுசுறுப்பாக செயற்பட்டுக்கொண்டிருந்த இந்த சந்தர்ப்பத்தில், இவ்வாறு கொரோனா நோய்த்...
About Me
Puthinam NEWS brings you the latest news and the global headlines in Tamil language.
1130 POSTS
0 COMMENTS
Latest News
மாவையின் உடல் தீயுடன் சங்கமம்
தமிழரசுக் கட்சியின் சிரேஷ்ட தலைவரும், முன்னாள் யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜாவின் இறுதிக் கிரிகைகள் இன்று (02/02) இடம்பெற்று, பூதவுடல் மாவிட்டபுரம் இந்து...
