இலங்கை ஜனாதிபதியின் நிறைவேற்று அதிகாரத்தினைப் பலப்படுத்தும் வகையில் உருவாக்கப்பட்ட 20வது அரசியலமைப்பு திருத்தம் எதிர்பார்த்தைப்போலவே பெரும்பான்மை பலத்துடன் நிறைவேற்றப்பட்டுள்ளது.
திருத்தத்திற்கு ஆதரவாக 156 வாக்குகளும், எதிராக 65 வாக்குகளும் அளிகப்பட்டிருந்தன.

வரும் காலங்களில் இலங்கையின் அரசியல் களத்தில் பல கடும்போக்கான நிகழ்வுகளை எதிர்பார்க்க முடியும். இதேவேளை அராசாங்கத்திற்குள்ளேயும் சில முரண்பாடுகளை எதிர்பார்க்கலாம் என அரசியல் ஆய்வாளர்கள் எதிர்வுகூறியுள்ளனர்.