கம்பஹா மாவட்டத்திலுள்ள திஹாரிய பிரதேசத்தில் அமைந்துள்ள “ஹெல குளோத்திங்” எனும் ஆடைத் தொழிற்சாலையில் பணியாற்றும் ஊழியர் ஒருவருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
இந்த ஊழியரின் மனைவி மினுவாங்கொட ஆடைத் தொழிற்சாலையில் பணிபுரிபவராவார்.

“ஹெல குளோத்திங்” நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தமது திஹாரிய ஆடைத் தொழிற்சாலை மறு அறிவித்தல்வரை மூடப்படிருக்கும் என தெரிவித்துள்ளது. மேலும் தொற்றாளருடன் நெருங்கிய தொடர்பிலிருந்தவர்களுக்கு கொரோனா தொற்று பரிசோதனை மேற்கொள்ளப்படுவதாகவும் தெரிவித்துள்ளது. இருப்பினும் தொழிற்சாலையிலுள்ள எல்லா ஊழியர்களுக்கும் கொரோனா தொற்று பரிசோதனை மேற்கொள்ளப்படுமா என்பது பற்றி எதுவும் குறிப்பிடப்படவில்லை.