இலங்கையின் கம்பஹா மாவட்டத்திற்கு மட்டும் இன்று (21/10) இரவு பத்து மணிமுதல் வரும் 26ம் திகதி காலை ஐந்து மணிவரை ஐந்து நாட்கள் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்படுவதாக இலங்கையின் இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

இருப்பினும், கம்பஹா மாவட்டத்தினூடாக வேறு மாவட்டங்களுக்கு செல்லும் போக்குவரத்திற்கு எவ்வித தடையுமில்லை என தெரிவித்த இராணுவத் தளபதி, எவ்வித காரணங்களுக்காகவும் கம்பஹா மாவட்டத்தி வாகனங்கள் நிறுத்தப்படக் கூடாது எனவும் தெரிவித்துள்ளார்.