புதினம்

யார் புதிய பிரதமர் ???

மக்களின் கடும் ஆர்ப்பாட்டங்களின் பின்னர் இலங்கை அரசியலில் பாரிய மாற்றம் ஏற்பட வாய்ப்புள்ளது. இதனடிப்படையில் மகிந்த பதவி விலகி, புதிய இடைக்கால அரசு ஒன்று அமைவதற்கான சாதக நிலைமை தோன்றியுள்ளது. புதிய இடைக்கால அரசில் யார் பிரதமர், எத்தனை அமைச்சுக்கள் அமையவுள்ளன என்பது பற்றி எதுவும் இதுவரையில் தெரியவரவில்லை. இலங்கை சுதந்திரக் கட்சி, ஐக்கிய மக்கள் சக்தி,...

ஊரடங்குச் சட்டத்தை மீறி கொழும்பு, கண்டியில் ஆர்ப்பாட்டம்

நாடுபூராகவும் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டிருந்தும் கொழும்பு கண்டி பிரதேசங்களில் மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில் பல முன்னணி பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் நூற்றுக் கணக்கான பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இவர்கள் சுதந்திர சதுக்கத்திற்குள் நுழைய முற்பட்டபோது காவல்துறையினர் தடுத்து நிறுத்தியுள்ளனர். இதேவேளை கொழும்பின் மஹரகம பகுதியிலும் மக்கள்...

பிணையில் விடுவிக்கப்பட்டார் அனுருத்த பண்டார

கடந்த வெள்ளிக்கிழமை (01/04) இரவு கடத்தப்பட்டு, பின்னர் முகத்துவாரம் காவல் நிலையத்தில் தடுத்துவைக்கப்பட்டிருந்த சமுக வலைத்தள செயற்பாட்டாளரான அனுருத்த பண்டார பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார். கொழும்பு நீதிவான் நீதிமன்றினால் இந்த பிணை வழங்கப்பட்டுள்ளது. அரசாங்கத்திற்கு எதிராக சமூக வலைத்தளங்களில் முனைப்புடன் செயற்பட்டார் என்ற குற்றச்சாட்டில், தண்டனைச் சட்டக்கோவை 120இன் பிரகாரம் அனுருத்த பண்டார கைது செய்யப்பட்டார்...

மேல்மாகாணத்தில் 664 பேர் கைது

இலங்கையின் மேல்மாகாணத்தில் 664 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். நேற்று இரவு 10 மணியிலிருந்து, இன்று காலை 6 மணிவரையான காலப்பகுதியில், ஊரடங்குச் சட்டத்தை மீறினார்கள் என்ற குற்றச்சாட்டில் மேற்படி கைது நடவடிக்கைகள் இடம்பெற்றுள்ளது. இலங்கையின் மற்றைய மாகாணங்களில் கைதுகள் ஏதும் இடம்பெற்றதா போன்ற தகவல்கள் ஏதும் காவல்துறையினரால் இதுவரை வெளியிடப்படவில்லை.

சமூக வலைத்தளங்களையும் முடக்கினார் கோத்தபாய

இலங்கையில் சமூக வலைத்தளங்களையும் முடக்கினார் ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச. முகநூல், வாட்ஸ்ஆப், யுரியூப், வைபர், இன்ஸ்ரகிராம் மற்றும் டுவிட்டர் போன்ற சமூக வலைத் தளங்களை அரசாங்கம் முடக்கியுள்ளது. அரசாங்கத்திற்கு எதிரான கருத்துக்களை மக்கள் சமூக வலைத் தளங்களில் அதிகமாக பகிர்ந்து வருவதால், அரசாங்கம் மேற்படி சர்வாதிகார நடவடிக்கையை எடுத்துள்ளது. பாதுகாப்பு அமைச்சினூடாக அனைத்து சமூக வலைத்தளங்களையும் முடக்கும்படி...

எவரும் வீட்டைவிட்டு வெளியேற முடியாது – கோத்தபாய ராஜபக்ச

ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ள காலப்பகுதியில் எவரும் வீட்டைவிட்டு வெளியேற முடியாது என இலங்கை ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச அதி விசேட வர்த்தமானி மூலம் நாட்டு மக்களுக்கு அறிவித்துள்ளார். தனக்குரிய நிறைவேற்று அதிகாரம் மற்றும் விசேட அதிகாரங்களைப் பயன்படுத்தி ஜனாதிபதி இந்த அதி விசேட வர்த்தமானியை வெளியிட்டுள்ளார். பாதுகாப்புத்துறை மற்றும் காவல்துறை சார்ந்த அல்லது அவர்களினால் அதிகாரமளிக்கப்பட்டவர்களினால் வழங்கப்படும்...

சமூக வலைத்தள செயற்பாட்டாளர் கடத்தல்

இலங்கையில் மீண்டும் ஆட்கடத்தல் ஆரம்பமாகியுள்ளது. அரச தரப்பிற்கு எதிராக கருத்து தெரிவிப்போரை இரும்புக் கரம் கொண்டு அடக்கும் நிகழ்வுகள் தொடரவுள்ளதையே நேற்று(01/04) இடம்பெற்ற கடத்தல் சம்பவம் சுட்டிக்காட்டுகின்றது. இளம் சமுக வலைத்தள செயற்பாட்டாளரான அனுருத்த பண்டார என்பவர் இனம் தெரியாதோரால் நேற்று (01/04) கடத்தப்பட்டார். கம்பொலவில் உள்ள அவரது வீட்டில் இருந்தபோது, சீருடையின்றி வந்த...

இராஜாங்க அமைச்சர் ரொஷான் ரணசிங்க பதவி விலகினார்

பொலனறுவை பாராளுமன்ற உறுப்பினரும், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி விவகாரங்கள் இராஜாங்க அமைச்சருமான ரொஷான் ரணசிங்க தனது அமைச்சுப் பதவியை இராஜினாமா செய்துள்ளார். இதற்கான கடிதத்தை அவர் ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்சவிற்கு அனுப்பியுள்ளார். பொருளாதார நெருக்கடியால் இலங்கை மக்களின் வாழ்வாதாரம் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டுள்ள இவ்வேளையில், அரசியல்ரீதியாக அரசாங்கம் பலமிழக்கும் நிலையை நோக்கிச் சென்றுகொண்டிருக்கின்றது.

சித்தாலேப குழுமத்தின் தலைவர் காலமானார்

இலங்கையின் புகழ் பெற்ற ஆயுர்வேத மருந்துப் பொருட்களை தயாரிக்கும் சித்தாலேப நிறுவனத்தின் தலைவர் திரு.விக்டர் ஹெட்டிகொட இன்று (02/04) காலமானார். இறக்கும்போது அவருக்கு வயது 84 ஆகும். 1971ம் ஆண்டு தனது அயராத முயற்சியால் உறவினர் ஒருவர் வழங்கிய ரூபாய் 2,500 பணத்துடன் தனது பயணத்தை ஆரம்பித்தார். ஆயுர்வேத துறையில் பல பொருட்களை உற்பத்தி செய்து,...

அவசரகால பிரகடனம் மூலம் அரசிற்கெதிரான போராட்டங்களை அடக்க முடியாது – சுமந்திரன்

ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்சவினால் இலங்கையில் பிரகடனப்படுத்தப்பட்டுள்ள அவசரகால பிரகடனத்தால், அரசிற்கெதிராக பொதுமக்களால் மேற்கொள்ளப்படும் போராட்டங்களை அடக்க முடியாது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் சமூகவலைத்தளத்தில் தெரிவித்துள்ளார். மேலும் ஜனாதிபதி தாம் பிறப்பித்துள்ள அவசரகால பிரகடனத்தை உடனடியாக மீளப் பெறவேண்டும் என தெரிவித்துள்ள சுமந்திரன், ஜனாதிபதியின் இந்த நடவடிக்கையை நிராகரிக்குமாறு சக பாராளுமன்ற...

About Me

Puthinam NEWS brings you the latest news and the global headlines in Tamil language.
1130 POSTS
0 COMMENTS
- Advertisement -spot_img

Latest News

மாவையின் உடல் தீயுடன் சங்கமம்

தமிழரசுக் கட்சியின் சிரேஷ்ட தலைவரும், முன்னாள் யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜாவின் இறுதிக் கிரிகைகள் இன்று (02/02) இடம்பெற்று, பூதவுடல் மாவிட்டபுரம் இந்து...
- Advertisement -spot_img