புதினம்
National news
ஆட்டத்தை ஆரம்பித்தார் கோத்தா, இலங்கையில் அவசரகால நிலை பிரகடனம்
புதினம் -
தனது சொந்த வீட்டினை மக்கள் முற்றுகையிட்டதனைக் காரணம் காட்டி இலங்கையில் அவசரகால நிலையைப் பிரகடனப்படுத்தியுள்ளார் ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச. அவசரகால நிலையின் பிரகாரம் இலங்கையில் சர்வாதிகார நிலை உருவாகும் அபாயம் தோன்றியுள்ளது. அவசரகால நிலையின்போது பொதுமக்களுக்கு சாதகமற்ற பின்வரும் நடைமுறைகளை காவல்துறையினரோ, படையினரோ பின்பற்றக்கூடிய சூழ்நிலை உருவாகியுள்ளது. பிடியாணையின்றிக் கைது செய்தல்48 மணி நேரத்திற்கு நீதிமன்றில்...
Local news
அரசின் கைக்கூலிகளைப் பாதுகாப்பாக அனுப்பி வைத்த யாழ் காவல்துறை
புதினம் -
இன்று (01/04) யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற ஐக்கிய மக்கள் சக்தியின் ஆர்ப்பாட்டப் பேரணியில் குழப்பம் ஏற்படுத்திய அரசின் கைக்கூலிகளை, யாழ் காவல்துறையினர் பாதுகாப்பாக முச்சக்கரவண்டியில் அனுப்பி வைத்துள்ளனர். நாட்டில் தற்போது உருவாகியுள்ள பொருளாதார நெருக்கடிக்கும், அரசின் பொறுப்பற்ற செயற்பாட்டினையும் கண்டித்து ஹிருணிகா பிரேமசந்திர தலைமையில் யாழ் கச்சேரியில் ஆரம்பித்து, மத்திய பேருந்து நிலையம்வரை பேரணி இடம்பெற்றது. பேரணியின்போது...
National news
மீரிஹான ஆர்ப்பாட்டம் 🎥
புதினம் -
நாளாந்த அடிப்படைத் தேவைகளுக்காக மணிக்கணக்கில் வரிசையில் நின்று விரக்தியடைந்த மக்களின் ஆர்ப்பாட்டம். வறுமையான ஆபிரிக்க நாடுகளுக்கு ஒப்பாக மாறும் இலங்கை.
National news
50பேர் காயம், 45பேர் கைது
புதினம் -
ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்சவின் இல்லத்தினை முற்றுகையிட முயன்ற பொதுமக்களுக்கும், படையினருக்கும் இடையில் இடம்பெற்ற கைகலப்பில் இதுவரை 50பேர் வரையில் காயமடைந்துள்ளனர். இதில் காவல்துறை அதிகாரி ஒருவர் உட்பட, பல விசேட அதிரடிப்படையினர் மற்றும் ஊடகவியலாளர்களும் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த ஆர்ப்பாட்டத்தில், ஒரு கலகமடக்கும் வாகனம், ஒரு முச்சக்கரவண்டி, வீதிப் போக்குவரத்து காவல்துறையினரின் இரண்டு மோட்டார் சைக்கிள்கள்,...
National news
ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்பட்டது
புதினம் -
நேற்று மாலை 7:30 மணியிலிருந்து மீரிஹானவில் அமைந்துள்ள ஜனாதிபதியின் இல்லத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டு மேற்கொண்ட ஆர்ப்பாட்டம் முழுமையாக கட்டுக்குள் கொண்டுவரப்பட்டதாக இலங்கை காவல்துறை அறிவித்துள்ளது. கொழும்பில் பல பகுதிகளில் அதிகாலை 12:45 மணியிலிருந்து அமுல்படுத்தப்பட்டிருந்த காவல்துறை ஊரடங்குச் சட்டம், காலை 5 மணியுடன் தளர்த்தப்பட்டதாகவும் காவல்துறையினர் அறிவித்துள்ளனர்.
National news
இதுவரையில் 10பேர் காயம். கைதுகள் ஏதும் இடம்பெறவில்லை
புதினம் -
இலங்கை ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்சவின் தனிப்பட்ட இல்லத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்திய பொதுமக்கள் மீது விசேட அதிரடிப்படையினர் மேற்கொண்ட தாக்குதல்களில் இதுவரை இரு ஊடகவியலாளர்கள் உட்பட 10பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் கடும் காயங்களிற்குள்ளான ஆறுபேர் கொழும்பு தேசிய வைத்தியசாலையிலும், நான்குபேர் கொழும்பு தெற்கு களுபோவில போதனா வைத்தியசாலையிலும் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட எவரும் கைது...
National news
கொழும்பின் பல பகுதிகளில் ஊரடங்குச் சட்டம்
புதினம் -
மீரிஹானவில் ஜனாதிபதியின் இல்லத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டு, இராணுவ வாகனங்களிற்கும் தீ வைத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுவருவதால், அங்கு பெரும் பதற்றம் நிலவி வருகின்றது. இதனால் அரசாங்கம் கொழும்பு மாவட்டதின் பல பகுதிகளில் காவல்துறை ஊரடங்குச் சட்டத்தை அமுல்படுத்தியுள்ளது. கொழும்பு மத்தி, கொழும்பு வடக்கு, கொழும்பு தெற்கு, நுகேகொட, களனி மற்றும் கல்கிசை காவல்துறை பிரிவுகளிலேயே மறு அறிவித்தல்வரை...
National news
ஜனாதிபதியின் இல்லம் முற்றுகை, இராணுவ வாகனங்களிற்கும் தீவைப்பு
புதினம் -
இலங்கை ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்சவின் தனிப்பட்ட இல்லத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டுள்ளனர். கொழும்பு மீரிகான பகுதியில் அமைந்துள்ள ஜனாதிபதியின் இல்லைத்தையே விரக்தியடைந்த மக்கள் சூழ்ந்துள்ளனர். இருப்பினும் ஜனாதிபதி அந்த இல்லத்தில் இல்லை என்றே தகவல்கள் தெரிவிக்கின்றன. மக்கள் மீது படையினர் கண்ணீர்ப் புகைக் குண்டு மற்றும் தண்ணீர் பாய்ச்சி எதிர்க்கின்றபோதும், பொதுமக்கள் முதலாவது தடையினை அகற்றி முற்றுகையைத்...
National news
பொருளாதார நெருக்கடி 2029 வரை தொடரும் – பந்துல
புதினம் -
இலங்கையில் தற்போது ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி வரும் 2029ம் ஆண்டுவரை தொடரும் என வர்த்தகத்துறை அமைச்சர் பந்துல குணவர்த்தன தெரிவித்துள்ளார். "இது பொருளாதார நெருக்கடி. இந்த நெருக்கடிக்கு தீர்வு காணும் நிலைமை கைமீறிச் சென்றுள்ளதால், அரசாங்கம் சர்வதேச நாணய நிதியத்தின் ஒத்துழைப்பை பெறத் தீர்மானித்துள்ளது" என அமைச்சர் பந்துல குணவர்த்தன தெரிவித்துள்ளார். மேலும், அரசியல் போராட்டங்களின் ஊடாக...
National news
13 மணிநேர மின்வெட்டு 😠
புதினம் -
இன்று (31/03) இலங்கையில் 13 மணிநேர மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது. நாட்டை 26 வலயங்களாகப் பிரித்து, பல்வேறு கட்டங்களாக மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது. வெவ்வேறு பகுதிகளில், வெவ்வேறு நேரங்களில் மின்வெட்டு அமுல்படுத்தப்படுவதால், எந்நேரத்தில் மின்வெட்டு இடம்பெறுமென தெரியாத ஒரு நிலையிலேயே பெரும்பாலானா மக்கள் உள்ளனர். இதேவேளை நீண்ட நேர மின்வெட்டின் காரணமாக கையடக்கதொலைபேசி சேவைகளில் பாதிப்பு ஏற்படுமென குறித்த நிறுவனங்கள்...
About Me
Puthinam NEWS brings you the latest news and the global headlines in Tamil language.
1130 POSTS
0 COMMENTS
Latest News
மாவையின் உடல் தீயுடன் சங்கமம்
தமிழரசுக் கட்சியின் சிரேஷ்ட தலைவரும், முன்னாள் யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜாவின் இறுதிக் கிரிகைகள் இன்று (02/02) இடம்பெற்று, பூதவுடல் மாவிட்டபுரம் இந்து...
