யார் புதிய பிரதமர் ???

மக்களின் கடும் ஆர்ப்பாட்டங்களின் பின்னர் இலங்கை அரசியலில் பாரிய மாற்றம் ஏற்பட வாய்ப்புள்ளது.

இதனடிப்படையில் மகிந்த பதவி விலகி, புதிய இடைக்கால அரசு ஒன்று அமைவதற்கான சாதக நிலைமை தோன்றியுள்ளது. புதிய இடைக்கால அரசில் யார் பிரதமர், எத்தனை அமைச்சுக்கள் அமையவுள்ளன என்பது பற்றி எதுவும் இதுவரையில் தெரியவரவில்லை.

இலங்கை சுதந்திரக் கட்சி, ஐக்கிய மக்கள் சக்தி, பொதுஜன பெரமுன மற்றும் ஐக்கிய தேசியக் கட்சி (ரணில் மட்டும்) என முக்கிய கட்சிகள் மற்றும் கூட்டணிகள் நாடாளுமன்றில் உள்ளன.

இதில் புதிய பிரதமராக பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினரே வரவேண்டும் என்பதில் ஜனாதிபதி உறுதியாக இருப்பதாகவும், ரணிலே சரியான தெரிவு என இன்னொரு அணி தெரிவித்திருப்பதாகவும் உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன.

சர்வதேச நாணய நிதியத்தின் தலையீடு வரும் வாரங்களில் இருந்து ஆரம்பிக்க உள்ளதால், ரணிலை பிரதமாராக நியமித்து சர்வதேச சவால்களைச் சமாளிக்கும் திட்டத்தை சிங்கள கொள்கை வகுப்பாளர்கள் வகுத்துள்ளார்கள் எனவும் ஒரு தகவல் தெரிவிக்கின்றது.

இதேவேளை புதிய அமைச்சரவையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சுமந்திரனுக்கும் ஒரு அமைச்சுப் பதவி வழங்கப்படலாம் எனவும் உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன.

அவ்வாறாயின் சஜித் பிரேமதாசா பிரதமர் இல்லையா?????

Latest articles

Similar articles