பிணையில் விடுவிக்கப்பட்டார் அனுருத்த பண்டார

கடந்த வெள்ளிக்கிழமை (01/04) இரவு கடத்தப்பட்டு, பின்னர் முகத்துவாரம் காவல் நிலையத்தில் தடுத்துவைக்கப்பட்டிருந்த சமுக வலைத்தள செயற்பாட்டாளரான அனுருத்த பண்டார பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

கொழும்பு நீதிவான் நீதிமன்றினால் இந்த பிணை வழங்கப்பட்டுள்ளது. அரசாங்கத்திற்கு எதிராக சமூக வலைத்தளங்களில் முனைப்புடன் செயற்பட்டார் என்ற குற்றச்சாட்டில், தண்டனைச் சட்டக்கோவை 120இன் பிரகாரம் அனுருத்த பண்டார கைது செய்யப்பட்டார் என காவல்துறையினர் நீதிமன்றில் தெரிவித்திருந்தனர்.

இருப்பினும், காவல்துறையினர் கடத்தல் பாணியில் அனுருத்தவை வீட்டிலிருந்து பலாத்காரமாக கூட்டிச் சென்றனர் என்பதே உண்மையாகும். நாட்டில் பிரகடணப்படுத்தப்பட்டுள்ள அவசரகால பிரகடணத்தின் பிரகாரம், எவரும் கேள்வி கேட்க முடியாது என்பதால், மேலும் இவ்வாறான பல வெள்ளைவான் கைதுகள் இடம்பெறுமோ என்னும் அச்சம் இலங்கையில் உருவாகியுள்ளது.

வெள்ளைவான் கடத்தல்களுக்கு பெயர்போன அரசாங்கம் என்பதால், வரும் நாட்களில் என்ன நடக்கும் என்பதனை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.

Latest articles

Similar articles