புதினம்

மர்ம கொள்கலனில் அனுப்பப்பட்டது என்ன? 🎥

கொழும்பு துறைமுகத்தினூடாக விசேட அதிரடிப்படையினரின் கடும் பாதுகாப்புடன் கொள்கலன் ஒன்று அனுப்பப்பட்டுள்ளது. அந்த மர்ம கொள்கலனில் ராஜபக்ச குடும்பத்தினரின் பெருந்தொகை தங்கமும், பணமும் (டொலர்களாக) இருந்திருக்கலாம். அல்லது அவண்ட் கார்ட் நிறுவத்தின் சட்டவிரோத ஆயுதங்கள் இருந்திருக்கலாம் எனும் சந்தேகம் எழுந்துள்ளது. ஏனெனில் கொள்கலனிற்கு மிக அருகில் இருந்து எடுக்கப்பட்ட வீடியோவில், விசேட அதிரடிப்படையினர் கொள்கலனைச் சூழ்ந்து...

பாடசாலை நேரம் அதிகரிக்கப்படுகிறது

இலங்கையில் வரும் 18ம் திகதி (18/04/22) முதல் பாடசாலை நேர்த்தை ஒரு மணித்தியாலத்தால் அதிகரிக்க கல்வி அமைச்சு முடிவு செய்துள்ளது. கொரோனா பரவலின் காரணமாக நாடு முழுவதுமான பாடசாலை நடவடிக்கைகளில் பாதிப்பு ஏற்பட்டிருந்தது. இதனால் 2022ம் ஆண்டுக்கான முதலாம் தவணை வரும் 18ம் திகதியே ஆரம்பமாகின்றது. 2022 இல் அனுமதிக்கப்பட்ட 210 பாடசாலை நாட்களில், 139...

ஜனாதிபதி பதவி விலக மாட்டார் – ஜோன்ஸ்ரன் பெர்னான்டோ

ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச பதவி விலக மாட்டார் என பாராளுமன்றில் அரசதரப்பு அறிவித்துள்ளது. 6.9 மில்லியன் மக்களின் வாக்குகள் பெற்று ஜனாதிபதியாக தெரிவான கோத்தபாய ராஜபக்ச, எந்தவொரு சூழலிலும் பதவி விலக மாட்டார் என ஜோன்ஸ்ரன் பெர்னான்டோ பாராளுமன்றில் ஆணித்தரமாகத் தெரிவித்துள்ளார். தற்போது பாராளுமன்றில் அரசாங்கத்தின் முக்கிய பிரமுகராக உள்ள ஜோன்ஸ்ரன் பெர்னான்டோ, நேரம் அதிகம் எடுத்து...

இலங்கையில் அவசரகாலப் பிரகடனம் நீக்கப்பட்டது

கடந்த முதலாம் திகதி நாடு முழுவதும் பிரகடணப்படுத்தப்பட்ட அவசரகாலப் பிரகடனத்தை ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச நீக்கியுள்ளார். இலங்கையின் பல பாகங்களில் மக்களின் ஆர்ப்பாட்டம் தொடர்ந்து நடைபெற்றுக்கொண்டிருப்பினும், அவசரகாலப் பிரகடனம் நீக்கப்படுவதாக அதி விசேட வர்த்தமானி மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது.

கொழும்பிலுள்ள பிரதமரின் இல்லம் அருகே மாணவர்கள் ஆர்ப்பாட்டம் 📹

பிரதமர் மகிந்த ராஜபக்சவின் கொழும்பு விஜேராம மாவத்தையில் அமைந்துள்ள இல்லம் அருகே பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்று தற்போது இடம்பெற்றுக்கொண்டிருக்கிறது. இதனால் சற்று பதற்றமான சூழ்நிலை தோன்றியுள்ளது. பல்கலைக்கழக மாணவர்களினால் ஒழுங்கு செய்யப்பட்டுள்ள இந்த ஆர்ப்பாட்டத்தில், பல நூற்றுக் கணக்கான இளைஞர், யுவதிகள் ஈடுபட்டுள்ளனர். கொட்டும் மழையிலும் அரசிற்கு எதிராக கோசங்கள் எழுப்பியபடி ஆர்ப்பாட்டதில் ஈடுபட்டுள்ளனர். மகிந்தவின் இல்லத்தைச்...

கோத்தாவின் நெருங்கிய சகா நாட்டைவிட்டு தப்பி ஓட்டம் 🎥

கோத்தபாய ராஜபக்சவின் நெருங்கிய சகாவும், அவண்ட் கார்ட் நிறுவனத்தின் தலைவருமான நிசங்க சேனாதிபதி குடும்பத்துடன் நாட்டை விட்டுத் தப்பி ஓடியுள்ளார். இன்று (05/04) அதிகாலை கட்டுநாயக்கா விமான நிலையத்தினூடாக டுபாய் சென்றுள்ளதாக பாராளுமன்றில் மக்கள் விடுதலை முன்னணியின் (JVP) உறுப்பினர் விஜித ஹேரத் தெரிவித்தார். பல பில்லியன் ரூபாய்களைக் (11.4) கொள்ளையிட்ட நிசங்க சேனாதிபதியை...

பாராளுமன்றம் 10 மணிக்கு கூடுகின்றது. பிரதமர் பதவியை இழப்பாரா?

இலங்கை வரலாற்றில் என்றும் இடம்பெற்றிராத புதியதொரு சூழ்நிலையில் பாராளுமன்றம் இன்று காலை 10 மணிக்குக் கூடுகின்றது. நாடுதழுவியரீதியில் இடம்பெற்றுகொண்டிருக்கும் சிங்கள மக்களின் ஆர்ப்பாட்டத்தின் மத்தியில், பாராளுமன்றம் கூடுகிறது. அரசிற்கு ஆதரவளித்துவரும் பல பாராளுமன்ற உறுப்பினர்கள் எதிர்க்கட்சி வரிசையில் அமரும் சாத்தியங்களும் காணப்படுகின்றது. சிங்கள மக்களின் பாரிய எதிர்ப்பையும் தாண்டி அரச ஆதரவு பாராளுமன்ற உறுப்பினர்கள் அரசுடன் தொடர்ந்து...

சுதந்திரக் கட்சி தனித்து செயற்பட முடிவு

இலங்கை சுதந்திரக் கட்சி பாராளுமன்றத்தில் தனித்து செயற்பட முடிவு செய்துள்ளது என அக்கட்சியின் தேசிய அமைப்பாளர் துமிந்த திசாநாயக்கா தெரிவித்துள்ளார். 14 பாராளுமன்ற உறுப்பினர்களைக் கொண்ட சுதந்திரக் கட்சி, அரசிலிருந்து வெளியேறுவது பொதுஜன பெரமுனவிற்கு பாரிய இழப்பாகும். வெகு விரைவில் அரசாங்கம் பெரும்பான்மையை இழக்கும் என ஆய்வாளர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.

அனைத்துக் கட்சிகளையும் ஒன்றிணையுமாறு அழைத்த ஜனாதிபதி

நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடிகளுக்குத் தீர்வு காண அனைத்துக் கட்சிகளையும் அமைச்சரவையில் இணையுமாறு ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச அழைப்பு விடுத்துள்ளார். இதேவேளை அமைச்சரவை அமைச்சர்கள் முழுமையாக பதவிகளைத் துறந்துள்ளதால், ஜனாதிபதி தற்காலிக அமைச்சரவை ஒன்றை அமைத்துள்ளார். இதில்,தினேஷ் குணவர்த்தன - கல்வி அமைச்சுஜி.எல்.பீரிஸ் - வெளிநாட்டு அமைச்சுஅலி சப்றி - நிதி அமைச்சுஜொன்ஸ்ரன் பெர்னான்டோ - பெருந்...

அமைச்சர்களின் இராஜினாமா மட்டும் போதுமா?

இலங்கையில் நாடு தழுவியரீதியில் மக்கள் மேற்கொண்ட போராட்டங்களையடுத்து, அமைச்சரவையில் இருந்த அனைத்து அமைச்சர்களும் இராஜினாமா செய்துள்ளனர். இருப்பினும் பிரதமர் மகிந்த ராஜபக்ச இன்னும் பதவி விலகவில்லை. அவர் தொடர்ந்தும் பிரதமராக செயற்படுவார் என டினேஷ் குணவர்த்தன தெரிவித்துள்ளார். 'ராஜபக்ச' குடும்பத்தினரால் இலங்கை பொருளாதாரரீதியில் மிகவும் மோசமான நிலைக்குச் சென்றுவிட்டது என பொதுமக்கள் நாடு தழுவியரீதியில் ஆர்ப்பாட்டங்களை மேற்கொண்டிருந்தார்கள்....

About Me

Puthinam NEWS brings you the latest news and the global headlines in Tamil language.
1130 POSTS
0 COMMENTS
- Advertisement -spot_img

Latest News

மாவையின் உடல் தீயுடன் சங்கமம்

தமிழரசுக் கட்சியின் சிரேஷ்ட தலைவரும், முன்னாள் யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜாவின் இறுதிக் கிரிகைகள் இன்று (02/02) இடம்பெற்று, பூதவுடல் மாவிட்டபுரம் இந்து...
- Advertisement -spot_img