புதினம்

உண்ணாவிரதம் இருந்த புத்த பிக்கு வைத்தியசாலையில் அனுமதி

கோத்தபாய ராஜபக்ச மற்றும் மகிந்த ராஜபக்ச ஆகியோர் உடனடியாகப் பதவி விலக வேண்டும் எனக்கோரி, காலிமுகத்திடலில் உண்ணாவிரதத்தை ஆரம்பித்த புத்த பிக்கு உடல் நிலை சரியின்மையால் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கடந்த புதன்கிழமை(20/02) சாகும்வரை உண்ணாவிரதத்தை ஆரம்பித்த தெரிபஹா சிறிதம்ம தேரர் எனும் புத்த பிக்கு, சடுதியாக நோயுற்றமையால் கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு நோயாளர் காவு...

முகக்கவசம் அணிவது கட்டாயம்

இலங்கையில் உடனடியாக அமுலுக்கு வரும்வகையில் பொது இடங்களில் முகக்கவசம் அணிவது மீண்டும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்னர் நீக்கப்பட்ட இந்த கட்டுப்பாட்டை இலங்கை சுகாதார அமைச்சு மீளப்பெற்றுள்ளது. தற்போது பரவலாக இடம்பெறும் ஆர்ப்பாட்டங்கள் மற்றும் காலி முகத்திடலில் மக்கள் பெருமளவில் கூடியுள்ளதை கருத்திலெடுத்தே இந்த கட்டுப்பாடு மீண்டும் அமுல்படுத்தப்படுவதாகத் தெரியவருகின்றது.

ஜனாதிபதி மற்றும் பிரதமரை பதவி விலகக்கோரி புத்த பிக்கு சாகும்வரை உண்ணாவிரதம்

ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச மற்றும் பிரதமர் மகிந்த ராஜபக்ச ஆகியோர் உடனடியாகப் பதவி விலக வேண்டும் எனக்கோரி புத்த பிக்கு ஒருவர் சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டம் ஒன்றை நேற்று(19/04) காலிமுகத்திடலில் ஆரம்பித்துள்ளார். தெரிபஹா சிறிதம்ம எனும் புத்த பிக்குவே சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளார். இவர் 2013ம் ஆண்டு கம்பஹா மாவட்டதிலுள்ள ரதுபஸ்வல கிராம மக்களுக்கு...

ஜனாதிபதி பதவி விலகுவதே ஒரே ஒரு தீர்வு – சுமந்திரன்

நாட்டில் ஏற்பட்டுள்ள தற்போதைய நிலைமையைக் கட்டுப்படுத்த, ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச தனது பதவியை இராஜினாமா செய்வதே ஒரே ஒரு சிறந்த தீர்வு என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் பிரதமர் மகிந்த ராஜபக்சவிடம் நேரடியாகவே தெரிவித்துள்ளார். நேற்று(20/04/22) இரவு பிரதமரின் அழைப்பின் பெயரில் அலரிமாளிகை சென்ற சுமந்திரன் அவர்களுக்கும், பிரதமருக்கும் இடையே முக்கிய...

மூன்று முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் அரசிற்கான ஆதரவை விலக்கிக்கொண்டனர்

எதிர்க்கட்சியில் இருந்து ராஜபக்ச அரசின் 20வது திருத்த சட்டத்திற்கு ஆதரவு தெரிவித்த மூன்று முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள், தாம் அரசிற்கு வழங்கிய ஆதரவை விலக்கிக்கொள்வதாக பாராளுமன்றில் தெரிவித்துள்ளனர். (f)பைஸல் காசிம், M.S.தெளபீக், இஷாக் ரஹ்மான் ஆகியோரே தாம் வழங்கிய அரசிற்கான ஆதரவை விலக்கிக்கொண்டவர்களாவர். இன்று இலங்கை நாடு இந்த நிலைக்கு செல்வதற்கு இவர்களும் ஒரு காரணமாக இருந்துள்ளார்கள்...

ரம்புக்கணை சம்பவம் தொடர்பாக அமெரிக்கா மற்றும் ஐ.நா அதிகாரிகளின் கருத்து

நேற்று(19/04) கேகாலை மாவட்டத்தின் ரம்புக்கணை பிரதேசத்தில் காவல்துறையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்ததுள்ளதுடன், 16 பேர் வரையில் காயமடைந்திருந்தனர். இந்த சம்பவத்தில் எட்டு காவல்துறையினரும் காயமடைந்திருந்தனர். இந்த துயர சம்பவம் தொடர்பாக இலங்கைக்கான அமெரிக்காவின் தூதுவர் ஜீலி சங் சமூக வலைத்தளம் மூலம் தெரிவித்ததாவது, ரம்புக்கணை சம்பவ செய்தியைக் கேட்டு தான் கவலையடைந்ததாகவும், பொதுமக்களுக்கோ...

பத்து வருடத்தில் முதல் முறையாக..

உலகின் பிரபல OTT தளமான (திரைப்படங்கள் மற்றும் நாடகங்களின் சேவைகளை வழங்கும் தளம்) நெட்பிளிக்ஸின் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கையில் பாரிய வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. இவ்வருடத்தின் முதல் மூன்று மாதங்களில் 200,000 வாடிக்கையாளர்களை இழந்துள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. இது நெட்பிளிக்ஸ் நிறுவனத்திற்கு கடந்த பத்து வருடங்களில் முதன்முறையாக ஏற்பட்ட வீழ்ச்சியாகும். மேலும் வரும் காலாண்டுப் பகுதியில் மேலும்...

எட்டு காவல்துறையினர் காயம், விசேட அதிரடிப்படையினர் குவிப்பு

ரம்புக்கணையில் பொதுமக்களால் மேற்கொள்ளப்பட்ட ஆர்ப்பாட்டத்தை கட்டுப்படுத்த காவல்துறையினர் நடத்திய துப்பாக்கி சூட்டில் பொதுமக்களில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் 16 பேர் வரையில் காயமடைந்துள்ளனர். இதேவேளை பொதுமக்களின் தாக்குதலால், காவல்துறையைச் சேர்ந்த எட்டுப் பேர் காயமடைந்து சிகிச்சை பெறுவதாக காவல்துறை பேச்சாளர் தெரிவித்துள்ளார். மேலும் நிலைமையைக் கட்டுப்படுத்துவதற்காக விசேட அதிரடிப் படையினர் ரம்புக்கணைப் பிரதேசத்தில் குவிக்கப்பட்டுள்ளதுடன், காவல்துறை ஊரடங்குச்...

ரம்புக்கணையில் பதற்றம். ஒருவர் உயிரிழப்பு, 12பேர் காயம்

கேகாலை மாவட்டத்தின் ரம்புக்கணை பிரதேசத்தில் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும், காவல்துறையினருக்கும் இடையில் இடம்பெற்ற மோதலில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், 12 பேர் காயமடைந்துள்ளனர். ஆர்ப்பாட்டக்காரர்களை கட்டுப்படுத்த காவல்துறையினர் கண்ணீர்ப்புகை தாக்குதலையும் மேற்கொண்டிருந்தனர். கோபமடைந்த மக்கள் ரம்புக்கணை காவல் நிலையத்தை சுற்றிவளைத்து கல்வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர். சம்பவம் தொடர்பாக காவல்துறை பேச்சாளர் தெரிவித்ததாவது, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மக்கள் காவல்துறையினர் மீது கல்வீசி தாக்குதல்...

நாடு முடக்கப்படும் அபாயம் !!

நாடுதழுவியரீதியில் மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளதால், அரசாங்கம் ஊரடங்குச் சட்டத்தை அறிவிக்கும் சாத்தியம் அதிகமாக உள்ளது!! ஆர்ப்பாட்டங்களைக் கட்டுப்படுத்த மாத்திரமன்றி, பாராளுமன்றில் நாளை அல்லது நாளை மறுதினம் எதிர்க்கட்சிகள் சமர்ப்பிக்கவுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரனையைத் தடுக்கவும் ஊரடங்குச் சட்டம் உதவும் என்பதை ராஜபக்ச சகோதரர்கள் நன்கறிவர். பல இடங்களிலும் பிரதான வீதிகளில் ஆர்ப்பாட்டங்கள் நிகழ்வதால், கொழும்பு-காலி, கொழும்பு-அவிசாவல போன்ற முக்கிய...

About Me

Puthinam NEWS brings you the latest news and the global headlines in Tamil language.
1130 POSTS
0 COMMENTS
- Advertisement -spot_img

Latest News

மாவையின் உடல் தீயுடன் சங்கமம்

தமிழரசுக் கட்சியின் சிரேஷ்ட தலைவரும், முன்னாள் யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜாவின் இறுதிக் கிரிகைகள் இன்று (02/02) இடம்பெற்று, பூதவுடல் மாவிட்டபுரம் இந்து...
- Advertisement -spot_img