புதினம்

பாராளுமன்றம் உரிய தீர்வை வழங்கத் தவறியுள்ளது – ரணில்

ராஜபக்ச அரசாங்கத்தை உடனடியாகப் பதவி விலக வேண்டுமெனக் கோரி இளைஞர்கள், யுவதிகள் உட்பட மக்கள் அனைவரும் வீதிக்கு இறங்கியுள்ளனர். இருப்பினும் அரசாங்கம் பதவி விலகவில்லை. அதற்கேற்றவகையில் பாராளுமன்றமும் உரிய தீர்வை வழங்கத் தவறியுள்ளது என ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க குற்றம் சுமத்தியுள்ளார். எரிபொருள் மற்றும் அத்தியாவசியப் பொருட்களுக்காக இந்தியா வழங்கிய...

மீண்டும் ஜனாதிபதியானார் எம்மானுவல் மக்ரொன்

பிரான்ஸ் நாட்டில் இடம்பெற்ற ஜனாதிபதித் தேர்தலில் தற்போதைய ஜனாதிபதி எம்மானுவல் மக்ரொன் மீண்டும் ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். வரும் ஐந்து ஆண்டுகளுக்கு இவர் ஜனாதிபதியாக பதவி வகிப்பார். இவரை எதிர்த்துப் போட்டியிட்ட மரைன் லி பென்னுடன் ஒப்பிடும்போது 58.55% இற்கு 41.45% என்னும் வீதத்தில் வெற்றிபெற்றார். பிரான்ஸ் நாட்டில், நடப்பு ஜனாதிபதி ஒருவர் மீண்டும் ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டமை, கடந்த...

அதிபர்கள், ஆசிரியர்கள் இன்று சுகயீன விடுமுறைப் போராட்டம்

இலங்கையிலுள்ள அனைத்துப் பாடசாலை அதிபர்கள் மற்றும் ஆசிரியர்கள் இன்று(25/04) சுகயீன விடுமுறைப் போராட்டம் ஒன்றை மேற்கொள்கின்றனர். இதனால் அதிபர்கள், ஆசிரியர்கள் எவரும் பாடசாலைக்குச் சமூகமளிக்க மாட்டார்கள். இலங்கை ஆசிரியர் சங்கத்தின் முன்மொழிவுகளை கல்வி அமைச்சு நிராகரித்தமை மற்றும் எரிபொருள் பிரச்சனைக்கு தீர்வு கிடைக்காமை போன்ற காரணங்களை முன்வைத்து இன்று இந்த சுகயீனப் போராட்டம் மேற்கொள்ளப்படுவதாக இலங்கை...

மகிந்தவின் அடுத்த நகர்வு

"இடைக்கால அரசு அமைந்தாலும் நான்தான் பிரதமர்" என மகிந்த ராஜபக்ச திடமாகத் தெரிவித்துள்ளார். ஆனால் நாட்டு நடைமுறையோ வேறுவிதமாக உள்ளது. ஒரு சதவீத மக்களேனும் 'ராஜபக்ச' அணிக்கு ஆதரவாக இல்லை. இந்தியா, சீனா போன்ற நாடுகளிடம் இருந்து கிடைக்கப்பெற்ற, கிடைக்கப்பெறவுள்ள தற்காலிக நிதி உதவியினை மட்டும் வைத்துக்கொண்டு, இலங்கையர்களை மூடர்களாக்கி, தொடர்ந்தும் நாட்டை ஆட்சி செய்ய...

ஐக்கிய மக்கள் சக்தியின் பாரிய ஊர்வலம். கண்டி – கொழும்பு

இலங்கையின் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி பாரிய ஆர்ப்பாட்ட ஊர்வலம் ஒன்றை ஒழுங்குபடுத்தியுள்ளனர். கண்டியிலிருந்து கொழும்புவரை இடம்பெறவுள்ள இந்த ஆர்ப்பாட்ட ஊர்வலம், வரும் 26ம் திகதியிலிருந்து 30வரை ஐந்து நாட்களில் ஐந்து கட்டங்களாக இடம்பெறவுள்ளன. கண்டியிலிருந்து 26ம் திகதி புறப்படும் இந்த ஆர்ப்பாட்ட ஊர்வலம், 30ம் திகதி கொழும்பை வந்தடையும். இறுதியாக மே மாதம்...

நஸீர் அஹமட் கட்சியில் இருந்து நீக்கம் – ஹக்கீம்

முன்னாள் கிழக்கு மாகாண முதலமைச்சரும், முஸ்லிம் காங்கிரசின் பாராளுமன்ற உறுப்பினருமான நஸீர் அஹமட் முஸ்லிம் காங்கிரஸ் கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். இவருக்கு அண்மையில் கோத்தபாய அரசாங்கத்தினால் அமைச்சுப் பதவி ஒன்றும் வழங்கப்பட்டது. கட்சி உயர் மட்டம் நேற்று(22/04) கூடி ஆராய்ந்து இந்த முடிவை எடுத்ததாக கட்சியின் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார். கட்சியிலிருந்து நீக்கப்பட்டதால் நஸீர்...

முன்னாள் தேர்தல்கள் ஆணையாளரும் இணைந்தார்

இலங்கையின் முன்னாள் தேர்தல்கள் ஆணையாளர் மகிந்த தேசப்பிரிய நேற்று(22/04) காலி முகத்திடலில் இடம்பெறும் மக்கள் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டார். இதன் மூலம் அவர் ராஜபக்ச சகோதரர்களின் அரசாங்கத்தை நேரடியாகவே எதிர்த்துள்ளார். மகிந்த தேசப்பிரிய ஓய்வு பெற முன்னர் பல இக்கட்டான சூழ்நிலைகளிலும், ராஜபக்ச சகோதர்களின் கடும் அழுத்தங்களின் மத்தியிலும் இவர் தேர்தல் கடமைகளை நடத்தியிருந்தார் என்பதும் இங்கே...

இலங்கையை விழுங்கும் நாடுகள்

தவறான கணிப்புகள் மற்றும் திட்டமற்ற முடிவுகளை ராஜபக்ச சகோதரர்களின் இலங்கை அரசாங்கம் மேற்கொண்டமையால், இலங்கை இன்று அதள பாதாளத்தில் வீழ்ந்துள்ளது. பொருளாதார வீழ்ச்சியின் தாக்கம் இந்தளவிற்கு இருக்கும் என ராஜபக்ச சகோதரர்கள் நினைத்திருக்கவில்லை என்பது, நாட்டில் தற்போது இடம்பெற்றுக்கொண்டிருக்கும் நிகழ்வுகள் மூலம் அறிய முடிகின்றது. எரிபொருள் தட்டுப்பாடு, மின்சார தடை, அத்தியாவசிய பொருட்களின் தட்டுப்பாடு மற்றும் விலை...

இலங்கையின் மருத்துவ சேவைக்கு உதவும் உலக வங்கி மற்றும் ஆசிய வங்கி

இலங்கையில் தற்போது ஏற்பட்டுள்ள கடும் பொருளாதார நெருக்கடியால் மருத்துவத் துறையும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. அரச மருத்துவமனைகளில் அவசிய மற்றும் அவசர சத்திரசிகிச்சைக்குப் பயன்படுத்தப்படும் மருந்துகள் உட்பட பல நூற்றுக்கணக்கான மருந்துகளுக்குப் பாரிய தட்டுப்பாடு நிலவுகின்றது. தனியார் மருத்துவமனைகளிலும் இதே நிலைமைதான் காணப்படுவதாகவும் கொழும்பு தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த நெருக்கடிகளை எதிர்கொள்ள உலக வங்கி மற்றும் ஆசிய...

பிரதமரும் அமைச்சரவையும் பதவி விலக வேண்டும் – டலஸ் அழகப்பெரும

பிரதமரும் அவரது அமைச்சரவையும் பதவி விலகி, அனைத்துக் கட்சிகளையும் உள்ளடக்கிய இடைக்கால அரசு அமைய வழிவிட வேண்டுமென முன்னாள் அமைச்சர் டலஸ் அழகப்பெரும ஜனாதிபதிக்கு கடிதம் எழுதியுள்ளார். மாத்தறை மாவட்டத்திலிருந்து பொதுஜன பெரமுன சார்பாக பாராளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்ட டலஸ் அழகப்பெரும, மகிந்த அரசில் முக்கிய புள்ளியாகத் திகழ்பவர். இவரது இந்த முடிவு அரசியல்...

About Me

Puthinam NEWS brings you the latest news and the global headlines in Tamil language.
1130 POSTS
0 COMMENTS
- Advertisement -spot_img

Latest News

மாவையின் உடல் தீயுடன் சங்கமம்

தமிழரசுக் கட்சியின் சிரேஷ்ட தலைவரும், முன்னாள் யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜாவின் இறுதிக் கிரிகைகள் இன்று (02/02) இடம்பெற்று, பூதவுடல் மாவிட்டபுரம் இந்து...
- Advertisement -spot_img