எட்டு காவல்துறையினர் காயம், விசேட அதிரடிப்படையினர் குவிப்பு

ரம்புக்கணையில் பொதுமக்களால் மேற்கொள்ளப்பட்ட ஆர்ப்பாட்டத்தை கட்டுப்படுத்த காவல்துறையினர் நடத்திய துப்பாக்கி சூட்டில் பொதுமக்களில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் 16 பேர் வரையில் காயமடைந்துள்ளனர்.

இதேவேளை பொதுமக்களின் தாக்குதலால், காவல்துறையைச் சேர்ந்த எட்டுப் பேர் காயமடைந்து சிகிச்சை பெறுவதாக காவல்துறை பேச்சாளர் தெரிவித்துள்ளார். மேலும் நிலைமையைக் கட்டுப்படுத்துவதற்காக விசேட அதிரடிப் படையினர் ரம்புக்கணைப் பிரதேசத்தில் குவிக்கப்பட்டுள்ளதுடன், காவல்துறை ஊரடங்குச் சட்டமும் அமுல்படுத்தப்பட்டுள்ளது.

ரம்புக்கணை பிரதேசத்தில் பதற்றம் இன்னும் தொடர்வதாகவும், பாதிக்கப்பட்ட மக்கள் இன்னும் கடும் கோபத்துடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.

ரம்புக்கணை ஆர்ப்பாட்டத்தில் ஏற்பட்ட கலகம் மற்றும் தாக்குதல் சம்பந்தமாக இலங்கை மனித உரிமைகள் ஆணையகம் மூவர் கொண்ட குழுவை நியமித்து விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.

Update 20/04/22 : இலங்கை காவல்துறையினர் வெளியிட்டுள்ள தற்போதைய தகவலின்படி, காவல்துறையினரைச் சேர்ந்த 20பேரும், பொதுமக்கள் 14பேரும் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

காயமடைந்த 20 காவல்துறையினரில் 15பேர் மேலதிக சிகிச்சைக்காக கண்டி தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Latest articles

Similar articles