புதினம்

கிளிநொச்சியில் நூற்றுக்கணக்கில் கால்நடைகள் பலி

தற்போது நிலவிவரும் சீரற்ற காலநிலை காரணமாக கிளிநொச்சி மாவட்டத்தில் நேற்றுவரை(09/12) 165 இற்கும் மேற்பட்ட கால்நடைகள் பலியாகியுள்ளன. கடும் காற்றுடன் கூடிய மழையினால் பல மரங்கள் முறிந்து வீழ்ந்தமையாலேயே மேற்படி கால்நடைகள் பலியாகியுள்ளன. சீரற்ற காலநிலை தொடர்வதால் இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது. பொருளாதார நெருக்கடியால் பாதிப்படைந்துள்ள மக்களை தற்போது சீரற்ற காலநிலையும் கடுமையாகத்...

நிதி அமைச்சருக்கு விமல் வீரவன்சவின் வேண்டுகோள்

பாடசாலை உபகரணங்கள் மற்றும் விசேட தேவையுடையோருக்கான பொருட்கள் மீதான வரியை உடனடியாக நீக்க வேண்டுமென பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச நிதி அமைச்சரிடம் கோரிக்கை விடுத்துள்ளார். பாடசாலை உபகரணங்கள் மீது விதிக்கப்பட்டுள்ள வரியினால், பாடசாலை உபகரணங்களின் விலை மூன்று மடங்காக அதிகரித்துள்ளது. இதனால் மாணவர்களுக்கான உபகரணங்களை கொள்வனவு செய்வதில் பெற்றோர்கள் பல இன்னல்களை எதிர்கொள்கின்றனர்...

உள்ளூராட்சி சபை தேர்தலுக்கான செலவு 10 பில்லியன் ரூபாய்

இலங்கையில் உள்ளூராட்சி சபை தேர்தலை நடத்த 10 பில்லியன் ரூபாய் வரையில் செலவாகும் என கணக்கிடப்பட்டுள்ளதாக தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு அதிகாரி சமன் ஶ்ரீ ரத்நாயக்கா தெரிவித்துள்ளார். உள்ளூராட்சி சபை தேர்தலை நடத்துவதற்குத் தேவையான 10 பில்லியன் ரூபாய் நிதி பட்ஜெட்டில் உள்ளடக்கப்பட்டிருந்ததாகவும், அது நேற்று பாராளுமன்றில் நிறைவேற்றப்பட்ட பட்ஜெட்டின் மூலம் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும்...

சித்தார்த்தனின் நம்பிக்கை

இனப்பிரச்சனைக்கு நியாயமான அரசியல் தீர்வு வழங்கப்பட்டால், புலம்பெயர்ந்து வெளிநாடுகளில் வாழும் தமிழர்கள் இலங்கையில் முதலீடு செய்வார்கள் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன் பாராளுமன்றில் தெரிவித்துள்ளார். இலங்கையின் தேசிய கொள்கை வகுக்கும்போது, வடக்கு, கிழக்கு மாகாண மக்களின் பங்களிப்பையோ, ஆலோசனைகளையோ அரசு பெறுவதில்லை. தெற்கில் உள்ள கட்சிகளே எல்லாவற்றையும் மேற்கொள்கின்றன என...

12ம் திகதி முதல் யாழ்-சென்னை விமான சேவை ஆரம்பம்

யாழ்ப்பாணத்திற்கும் சென்னைக்குமிடையிலான நேரடி விமான சேவை வரும் 12ம் திகதி முதல் (12/12) மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளது. அலியான்ஸ் எயார் (Alliance Air) நிறுவனம் வாரத்திற்கு நான்கு நாட்கள் யாழ்-சென்னை விமான சேவையை மேற்கொள்ளவுள்ளது. ஒரு வழிக்கட்டணமாக அண்ணளவாக ரூபாய் 42,000 (9,200 இந்திய ரூபாய்கள்) அறவிடப்படுகிறது. 90 நிமிட விமான பயணத்திற்காக ATR-72 வகை...

ஜனவரி முதல் இணையத்தில் கடவுச்சீட்டிற்கு விண்ணப்பிக்கலாம்

வரும் ஜனவரி மாதம் முதல் இலங்கையில் இணையத்தினூடாக கடவுச்சீட்டிற்கு விண்ணப்பிக்கலாம் என திணைக்களத்தின் தகவல் தொடர்பு கட்டளை அதிகாரி சம்பிக்க ராமவிக்கிரம தெரிவித்துள்ளார். விண்ணப்பதாரிகள் வீட்டிலிருந்தே கடவுச்சீட்டு விண்ணப்பத்தினை இணையத்தில் பூர்த்தி செய்து, குடிவரவு குடியகல்வுத் திணைக்களத்திற்கு சமர்ப்பிக்கலாம். இருப்பினும் கைரேகைகளை வழங்குவதற்கு விண்ணப்பதாரிகள் திணைக்களத்திற்கு சமூகமளிக்க வேண்டிவரும் எனவும், இதற்காக புதிய 50 கவுண்டர்கள் நிறுவப்படவுள்ளதாகவும்...

5 வயதிற்குட்பட்ட சிறுவர்களில் 15 வீதமானோர் போஷாக்கின்மையால் பாதிப்பு

இலங்கையில் ஐந்து வயதிற்குட்பட்ட சிறுவர்களில் 15 வீதமானோர் போஷாக்கின்மையால் பாதிப்படைந்துள்ளனர் என ஆய்வுத் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஐந்து வயதிற்குட்பட்ட 95 வீதமான சிறுவர்களின் நிலையை மதிப்பிட்டபோது, அதில் 15 வீதமான சிறுவர்கள் குறைவான எடையைக் கொண்டவர்களாகக் காணப்படுகிறார்கள். சிறுவர்களின் எடை குறைவிற்கு முக்கிய காரணம் முறையான போஷாக்கின்மையே ஆகும். கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில், 2022ம் ஆண்டு...

இலங்கையில் சமூக வலைத்தளங்களினூடான துஷ்பிரயோகங்கள் அதிகரிப்பு

சமூக வலைத்தளங்களினூடாக பெண்கள் மற்றும் சிறுவர்கள் துஷ்பிரயோகம் செய்யப்படுவது இலங்கையில் அதிகரித்துள்ளதாக தொழில்நுட்ப இராஜாங்க அமைச்சர் கனக ஹேரத் தெரிவித்துள்ளார். சமூக வலைத்தளங்களினூடாக மேற்கொள்ளப்பட்ட துஷ்பிரயோகங்கள் தொடர்பான 12,000 இற்கும் மேற்பட்ட வழக்குகள் கடந்த பத்து மாதங்களில் பதிவாகியுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார். குறிப்பாக பெண்கள், சிறுவர்களை இலக்கு வைத்து மேற்கொள்ளப்படும் இவ்வாறான துஷ்பிரயோகங்களைத் தடுக்க, பெற்றோர்கள் மற்றும்...

பாடசாலை மாணவர்கள் மத்தியில் போதைப்பொருள் பாவனை அதிகரிப்பு

இலங்கையில் பாடசாலை மாணவர்கள் மத்தியில் போதைப்பொருள் பாவனை அதிகரித்துள்ளது என பொதுப் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார். மேல் மாகாணம் மற்றும் தென் மாகாணம், அனுராதபுரம் மற்றும் குருநாகல் மாவட்டங்களில் பாடசாலை மாணவர்கள் மத்தியில் போதைப்பொருள் பாவனை மிக மிக அதிகளவில் அதிகரித்துள்ளதுள்ளதாக ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார். மேலும் போதைப்பொருள் பாவனையை கட்டுப்படுத்த, விசேட அதிரடிப்படையினரை கடமையில்...

13,000 வரையிலான உக்ரேனிய படையினர் உயிரிழப்பு

ரஷ்யா உக்ரேன் போர் தொடங்கிய நாளிலிருந்து இதுவரை 10,000 தொடக்கம் 13,000 வரையிலான உக்ரேனிய படையினர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. உக்ரேனிய ஜனாதிபதியின் ஆலோசகரின் கருத்துப்படி, 10,000 தொடக்கம் 13,000 வரையிலான இராணுவத்தினர் போரில் இறந்துள்ளார்கள் என தெரியவருகின்றபோதிலும், உண்மையான இழப்புகள் அதிகமாக இருக்கலாம் என நம்பப்படுகிறது. இருப்பினும் உக்ரேனிய இராணுவத்தினர் எவ்வித உத்தியோகபூர்வ உயிரிழப்பு...

About Me

Puthinam NEWS brings you the latest news and the global headlines in Tamil language.
1072 POSTS
0 COMMENTS
- Advertisement -spot_img

Latest News

முதல் ஆறு மாதங்களில் 6 இலட்சம் சுற்றுலாப் பயணிகள்

இவ்வாண்டு முதல் ஆறு மாத காலப்பகுதியில் சுமார் 608,489 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வந்துள்ளனர். இந்தியா, ரஷ்யா, பிரித்தானியா, அமெரிக்கா, சீனா, ஆஸ்திரேலியா, பிரான்ஸ் மற்றும் கனடா...
- Advertisement -spot_img