புதினம்

வடக்கு கடற்பரப்பில் தத்தளித்த மியன்மார் அகதிகளை மீட்ட கடற்படையினர்

வடமராட்சி கிழக்கு வெற்றிலைக்கேணி கடற்பரப்பில் படகு பழுதடைந்து தத்தளித்துக்கொண்டிருந்த மியன்மார் அகதிகளை இலங்கை கடற்படையினர் மீட்டுள்ளனர். குழந்தைகள், பெண்கள், முதியவர்கள் என 104பேர் படகில் இருந்துள்ளனர். நேற்று(17/12) மீனவர்கள் வழங்கிய தகவல்களையடுத்து சம்பவ இடத்திற்க்கு விரைந்த இலங்கை கடற்படையினர், மேற்படி அகதிகளை மீட்டு இன்று(18/12) காங்கேசன்துறை கடற்படை தளத்திற்கு ...

புலம்பெயர் தமிழர்களின் உதவியுடன் இலங்கையை மீட்க ரணில் திட்டம்!

ராஜபக்ச குடும்பத்தின் அதிகார மோகத்தால் பொருளாதாரரீதியில் சீரழிக்கப்பட்டுள்ள இலங்கையை, புலம்பெயர் தமிழர்களின் உதவியுடன் மீட்க, ராஜபக்சவினரின் ஆசியுடன் தற்போது ஜனாதிபதியாக பதவி வகிக்கும் ரணில் விக்கிரமசிங்க திட்டம் தீட்டியுள்ளாரா என ஐயமேற்படுகிறது. கட்சித் தலைவர்களுடன் இடம்பெற்ற சந்திப்பில் வரும் 75வது சுதந்திர தினத்திற்கு முன்னர் (04/02/2023) இனப் பிரச்சனைக்கு தீர்வு காண்பதாக ஜனாதிபதி ரணில்...

கால்நடைகள் உயிரிழந்தமைக்கு கடும் குளிரே காரணம்!

வடக்கு கிழக்கு மாகாணங்களில் கால்நடைகள் உயிரிழந்தமைக்கு கடும் குளிர் காலநிலையே காரணம் என விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். உயிரிழந்த கால்நடைகளிலிருந்து பெறப்பட்ட மாதிரிகளை ஆய்வு செய்த குழு தமக்கு தொலைபேசியூடாக விபரத்தை தெரிவித்ததாக விவசாய அமைச்சர் தெரிவித்துள்ளார். கடந்த சில தினங்களில் வடக்கு கிழக்கு மாகாணங்களில் 1,660 இற்கும் மேற்பட்ட பசுக்கள், எருமைகள் மற்றும்...

போசாக்கின்மையால் மலையக மாணவர்கள் பாதிப்பு – இ.ஆ.ச

இலங்கையின் பொருளாதார நெருக்கடியால் ஏற்பட்டுள்ள சிறுவர்கள் மற்றும் மாணவர்களின் போசாக்கின்மை பிரச்சனையில், மலையக தோட்ட பாடசாலை மாணவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்க பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். போசாக்கின்மையால் பெருந்தோட்டப் பகுதியில் மாணவர்கள் பாடசாலைக்கு வருகை தருவது மிகவும் குறைவடைந்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், இலங்கையில் 2.9 மில்லியன்...

போராளிகள் நலன்புரிச் சங்கம்

"இனத்திற்காக உழைத்தவர்களை இன்னலின்றி வாழ வைப்போம்" எனும் தொனிப் பொருளில், போராளிகள் நலன்புரிச் சங்கம் யாழ்ப்பாணத்தில் நேற்று(11/12) அங்குரார்ப்பணம் செய்யப்பட்டுள்ளது. சர்வ மதத் தலைவர்கள், முன்னாள் போராளிகள், வர்த்தகப் பிரமுகர்கள் மற்றும் பிரபல சட்டத்தரணி தவராசா ஆகியோர் நிகழ்வில் பங்குபற்றியிருந்தனர். போர் முடிவுற்று 13 வருடங்கள் கடந்தும், வடக்கு கிழக்கில் முன்னாள் போராளிகள் இன்னும் பாரிய இடர்களை...

பனங்கள்ளு ஏற்றுமதி, $45,000 வருமானம்

இலங்கையிலிருந்து ஏற்றுமதி செய்யப்பட்ட பனங்கள்ளு மூலம் 45,000 அமெரிக்க டொலர்கள் வருமானமாகக் கிடைத்துள்ளதாக பனை அபிவிருத்திச் சபை தெரிவித்துள்ளது. இலங்கையின் வட மாகணத்திலிருந்து பெறப்பட்ட போத்தலில் அடைக்கப்பட்ட பனங்கள்ளு, முதன் முதலாக (f)பிரான்சிற்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலமே 45,000 அமெரிக்க டொலர்கள் வருமானமாகக் கிடைக்கப்பெற்றுள்ளது. தற்போது அமெரிக்கா, கனடா, சுவிட்ஸர்லாந்து போன்ற நாடுகளுக்கு அதிகளவு பனங்கள்ளு ஏற்றுமதி...

நாட்டின் கலாச்சாரத்தை சீரழிக்க அரசியல்வாதிகளுக்கு இடமளிக்க முடியாது – மல்கம் ரஞ்சித்

பெளத்த போதனைகளால் ஒழுக்கம் மிக்க சமூகத்தினர் தோற்றம் பெற்ற இந்த நாட்டின் கலாச்சாரத்தை சீரழிக்க அரசியல்வாதிகளுக்கு இடமளிக்க முடியாது என கத்தோலிக்க பேராயர் மல்கம் ரஞ்சித் தெரிவித்துள்ளார். போதைவஸ்து பாவனைக்கெதிராக கடும் சட்டங்களை அமுல்படுத்தும் அதேவேளை, கஞ்சா பயிர்செய்கையை சட்டமாக்குவதற்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாகவும் பேராயர் குற்றம் சாட்டினார். மேலும், வெளிநாடுகளில் படித்தவர்கள் இலங்கைக்கு வந்து இரவு நேர...

ஆட்டிறைச்சி, மாட்டிறைச்சி விநியோகம் இடைநிறுத்தம்

இலங்கையில் மாவட்ட மற்றும் மாகாணங்களுக்கு இடையேயான ஆட்டிறைச்சி மற்றும் மாட்டிறைச்சி விநியோகங்களை உடனடியாக நிறுத்தும்படி ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உத்தரவிட்டுள்ளார். கடந்த இரு நாட்களாக நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலையால் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் ஆயிரக்கணக்கில் கால்நடைகள் சடுதியாக உயிரிழந்துள்ளன. இதனைக் கருத்திற்கொண்டு இறைச்சி விநியோகங்களை உடனடியாக நிறுத்துமாறு ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளார். கால்நடைகளின் சடுதியான உயிரிழப்பைத்...

யாழ் குப்பிளானில் ஹெரோயின் போதைப் பொருளுடன் பெண் கைது

யாழ்ப்பாணம் குப்பிளான் கிராமத்தில் பெண் ஒருவர் ஹெரோயின் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளார். யாழ் மாவட்ட போதைப்பொருள் தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்ட 38 வயதான பெண்ணிடமிருந்து 130g ஹெரோயின் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது. மேலதிக விசாரணைகளுக்காக கைது செய்யப்பட்ட பெண்ணையும், கைப்பற்றப்பட்ட போதைப்பொருளையும் சுன்னாகம் காவல்துறையினரிடம் யாழ் மாவட்ட போதைப்பொருள் தடுப்புப் பிரிவினர் ஒப்படைத்துள்ளனர். வடக்கு மாகாணத்தில் இளைஞர்கள்...

சூதாட்ட நிலையங்கள் 7 வருடங்களாக வரி செலுத்தவில்லை – ஹர்ஷா

இலங்கையில் உள்ள 4 பிரதான கசினோ சூதாட்ட நிலையங்கள் கடந்த 7 வருடங்களாக வரி செலுத்தவில்லை என பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷா டி சில்வா தெரிவித்துள்ளார். கசினோ சூதாட்ட நிலையங்களிலிருந்து அறவிடப்படவேண்டிய சுமார் 200 மில்லியன் ரூபாய் வரியை முறையாக அறவிட்டால், தனிநபர் வருமான வரியை அதிகரிக்க வேண்டிய அவசியம் இருக்காது எனவும் அவர் தெரிவித்துள்ளார். அரசாங்கம்,...

About Me

Puthinam NEWS brings you the latest news and the global headlines in Tamil language.
1072 POSTS
0 COMMENTS
- Advertisement -spot_img

Latest News

முதல் ஆறு மாதங்களில் 6 இலட்சம் சுற்றுலாப் பயணிகள்

இவ்வாண்டு முதல் ஆறு மாத காலப்பகுதியில் சுமார் 608,489 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வந்துள்ளனர். இந்தியா, ரஷ்யா, பிரித்தானியா, அமெரிக்கா, சீனா, ஆஸ்திரேலியா, பிரான்ஸ் மற்றும் கனடா...
- Advertisement -spot_img