இதுவரை காலமும் உதயன் பத்திரிகை மீது 38 தடவைகள் தாக்குதல்

யாழில் இயங்கிவரும் தனியார் பத்திரிகையான உதயன் பத்திரிகை அலுவலகம் மற்றும் ஊழியர்கள் மீது இதுவரைகாலமும் 38 தடவைகள் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது, ஆனால் எவ்வித விசாரணைகளும் நடத்தப்படவில்லை என உதயன் பத்திரிகையை நடத்திவரும் ஈ.சரவணபவன் தெரிவித்துள்ளார்.

இம்முறை பாராளுமன்றத் தேர்தலில் சனநாயக தமிழரசுக் கூட்டணியில் (சின்னம் மாம்பழம்) போட்டியிடும் சரவணபவன், தேர்தல் விஞ்ஞாபனம் வெளியிடும் நிகழ்விலேயே மேற்குறித்த தகவலை அவர் தெரிவித்திருந்தார்.

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், இலங்கையை ஆட்சி செய்த அனைத்து ஜனாதிபதிகளிடமும் தாம் முறையிட்டும் எவ்வித நடவடிக்கைகளும் எடுக்க்கவில்லை. மேலும் வெளிநாட்டு தூதரகங்கள் மற்றும் சர்வதேச நிறுவனங்களிடமும் முறைப்பாடு செய்திருந்தோம், ஆனால் எவ்வித பலன்களும் ஏற்படவில்லை எனவும் அவர் தெரிவித்திருந்தார்.

உதயன் பத்திரிகை ஊழியர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலினால் உயிரிழந்த ஊழியர்களின் குடும்பங்களுக்கு முறையான நிவாரணத்தை அந்த பத்திரிகையின் நிர்வாகம் வழங்கவில்லை எனும் பரவலான குற்றச்சாட்டு யாழ் மக்கள் மத்தியில் இன்றும் உள்ளது.

Puthinam NEWS WhatsApp Channel

Latest articles

Similar articles