2024 பாராளுமன்ற பொதுத் தேர்தலில் தேசிய மக்கள் சக்தி நாடு முழுவதும் மாபெரும் வெற்றியைப் பெற்றுள்ளது.
யாழ் தேர்தல் மாவட்டத்திலும் 80,830 வாக்குகளைப் பெற்று மூன்று ஆசனங்களை வென்றுள்ளது தேசிய மக்கள் சக்தி. பாரம்பரிய தமிழ் கட்சியான தமிழரசுக் கட்சி ஒரு ஆசனத்தையும், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி ஒரு ஆசனத்தையும், வைத்தியர் அர்ச்சுனாவின் சுயேட்சைக் குழு ஒரு ஆசனத்தையும் வென்றுள்ளன.
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான சுமந்திரன், டக்ளஸ் தேவானந்தா, அங்கஜன் இராமநாதன், செல்வராசா கஜேந்திரன் ஆகியோர் இம்முறை தோல்வியடைந்துள்ளனர்.
இதேவேளை வைத்தியர் அர்ச்சுனாவுடன் இணைந்து போட்டியிட்ட சட்டத்தரணி கெளசல்யா 15,789 வாக்குகளைப் பெற்றிருந்தார். சுமந்திரன் (15,039 வாக்குகள்) மற்றும் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் (15,135 வாக்குகள்) ஆகியோர் பெற்ற வாக்குகளைக் காட்டிலும் கெளசல்யா பெற்ற வாக்குகள் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.
யாழ் தேர்தல் மாவட்டத்தில் தமிழரசுக் கட்சியின் சிவஞானம் சிறீதரன் அதிகூடிய விருப்பு வாக்குகளைப் பெற்றுள்ளார். வெற்றி பெற்ற வேட்பாளர்களின் முழுமையான விருப்பு வாக்குகள் விபரம் இதோ.