நடந்து முடிந்த பொதுத் தேர்தலில் வடக்கு மாகாணத்திலும் மாபெரும் வெற்றி பெற்றுள்ளது தேசிய மக்கள் சக்தி. யாழ்ப்பாணம் மற்றும் வன்னி தேர்தல் மாவட்டங்களில் தேசிய மக்கள் சக்தி மொத்தமாக 5 ஆசனங்களைப் பெற்று, வடக்கு அரசியல் கட்சிகளுக்கு பாரிய அதிர்ச்சியைக் கொடுத்துள்ளது.
குறிப்பாக யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டத்தில் காலம் காலமாக கோலூச்சி வந்த தமிழரசுக் கட்சியை வீழ்த்தி மூன்று ஆசனங்களை வென்ற தேசிய மக்கள் சக்தி, வன்னி தேர்தல் மாவட்டத்திலும் இரண்டு ஆசனங்களை வென்றுள்ளது.
யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டம்
யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களை உள்ளடக்கிய யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டத்தில் மொத்தமாக 80,830 வாக்குகளைப் பெற்று மூன்று ஆசனங்களைப் பெற்றுள்ளது தேசிய மக்கள் சக்தி. முதன்மை வேட்பாளர் க.இளங்குமரன் 32,102 வாக்குகளைப் பெற்றிருந்தார்.
- க.இளங்குமரன் – 32,102
- Dr.ஶ்ரீ பவானந்தராஜா – 20,430
- ஜெ.ரஜீவன் – 17,579
வன்னி தேர்தல் மாவட்டம்
முல்லைத்தீவு, வவுனியா மற்றும் மன்னார் மாவட்டங்களை உள்ளடக்கிய வன்னி தேர்தல் மாவட்டத்தில் 39,894 வாக்குகளைப் பெற்று இரண்டு ஆசனங்களைப் பெற்றுள்ளது தேசிய மக்கள் சக்தி.
- Dr.செ.திலகநாதன் – 10,652
- ஆ.ஜெகதீஸ்வரன் – 9,280