புதினம்

பதில் ஜனாதிபதியாக ரணில் இன்று பதவியேற்பார் !!

இலங்கை ஜனாதிபதியின் இராஜினாமாக் கடிதம் இன்று சபாநாயகரால் வெளியிடப்பட்டபின்னர், ரணில் விக்ரமசிங்க பதில் ஜனாதிபதியாக பதவியேற்பார் எனத் தெரியவருகின்றது. இலங்கை அரசியல் யாப்பின்படி, பதவிக்காலம் முடியும் முன்னர் ஜனாதிபதி பதவி விலகினால், பிரதமராக பதவி வகிப்பவரே ஜனாதிபதியாக பதவியேற்க முடியும். இதனடிப்படையில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பிரதம நீதியரசர் முன்னிலையில் இன்று பதவி ஏற்கலாம் என...

ஆழ்கடலில் தத்தளித்த 55பேரை மீட்ட கடற்படை 📷

சட்டவிரோதமாக மீன்பிடி படகில் ஆஸ்திரேலியா சென்றுகொண்டிருந்தபோது புயலில் சிக்கி தத்தளித்துக்கொண்டிருந்த 55பேரை இலங்கை கடற்படையினர் மீட்டுள்ளனர். ஹம்பாந்தோட்டையிலிருந்து 390 கடல்மைல் தொலைவில் கடந்த 10ம் திகதி மேற்படி சம்பவம் இடம்பெற்றுள்ளது. மீட்கப்பட்டவர்களில் 46 ஆண்கள், 03 பெண்கள் மற்றும் 06 சிறுவர்கள் உள்ளடங்குவர். மீட்கப்பட்டவர்கள் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, மன்னார், வவுனியா, திருகோணமலை மற்றும் கற்பிட்டி பிரதேசங்களைச்...

கோத்தபாய நாட்டைவிட்டு வெளியேறினார்!

இலங்கை ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச விமானப்படை விமானத்தில் இலங்கையை விட்டு வெளியேறியுள்ளார் என BBC செய்திச்சேவை தெரிவித்துள்ளது. எந்த நாட்டிற்கு தப்பிச் சென்றுள்ளார் என எவ்வித தகவல்களும் இதுவரை வெளியாகவில்லை. மேலும் முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ச மற்றும் நாமல் ராஜபக்ச ஆகியோரும் இன்னும் தலைமறைவாகவே உள்ளனர். இவர்கள் இன்னும் இலங்கையில் உள்ளார்களா இல்லை இலங்கையை...

யூரியா மற்றும் சமையல் எரிவாயு கப்பல்கள் நாட்டை வந்தடைந்துள்ளன

இந்தியாவிலிருந்து 44,000 மெற்றிக் தொன் யூரியா பசளையை ஏற்றிய கப்ப்ல இலங்கையை வந்தடைந்துள்ளது. இந்திய கடன் உதவி திட்டத்தின் கீழ் வழங்கபடவுள்ள 65,000 மெற்றிக் தொன் யூரியா பசளையில், முதற்கட்டமாக 44,000 மெற்றிக் தொன் தற்போது நாட்டை வந்தடைந்துள்ளது. மிகுதி 21,000 மெற்றிக் தொன் யூரியா ஒரு மாதகாலத்தினுள் இலங்கையை வந்தடையும் என விவசாய...

பதவி விலகுவதை உறுதி செய்தார் ஜனாதிபதி

இலங்கை ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச தனது பதவி விலகலை உறுதி செய்துள்ளதாக பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது. இருப்பினும் பதவி விலகும் திகதி தொடர்பாக எவ்வித விபரமும் குறிப்பிடப்படவில்லை. கடந்த 9ம் திகதி இடம்பெற்ற மாபெரும் ஆர்ப்பாட்டத்தினையடுத்து வரும் 13ம் திகதி(13/07) ஜனாதிபதி பதவி விலகுவார் என சபாநாயகர் அறிவித்திருந்தார். இதுவரையில் ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச, மக்களுக்கு நேரடியாக...

இலங்கையில் போதைப்பொருள் மாஃபியாக்களின் அட்டகாசம்

இலங்கையில் தற்போது ஏற்பட்டுள்ள அரசியல் ஸ்திரத்தன்மை இன்மை நிலையைப் பயன்படுத்தி போதைப்பொருள் மாஃபியாக்கள் அட்டகாசம் புரிந்து வருகின்றனர். கடந்த ஒரு மாத காலத்தில் கொழும்பு மற்றும் அதனை அண்டிய பகுதியில் 20பேருக்கும் மேற்பட்டோர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். சுட்டவர்களும், இறந்தவர்களும் போதைப்பொருள் கடத்தல் அல்லது வியாபாராம் தொடர்பான நபர்களே. கடந்த 29ம் திகதி இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் T-56...

இலங்கை முற்றாக முடங்கும் அபாயம்!

இலங்கையில் எரிபொருள் இறக்குமதியில் ஏற்பட்டுள்ள பின்னடைவு காரணமாக நாடு முற்றாக முடங்கும் நிலை தோன்றியுள்ளது. இன்றிலிருந்து(28/06) வரும் 10ம் திகதிவரை பின்வரும் அத்தியாவசிய சேவைகளுக்கு மாத்திரமே எரிபொருள் வழங்கப்படும் என அமைச்சரவையில் முடிவெடுக்கப்பட்டுள்ளது.👉சுகாதார சேவைகள்👉துறைமுக சேவைகள்👉விமான சேவைகள்👉பாதுகாப்பு சேவை👉விவசாய சேவைகள்👉உணவுப் போக்குவரத்து சேவைகள் ஜூலை 10ம் திகதிவரை இலங்கைக்கு எரிபொருள் கப்பல்கள் வருவதற்கான சாத்தியங்கள் இல்லாத காரணத்தினால்,...

நகர்ப்புற பாடசாலைகள் ஜூலை முதலாம் திகதிவரை மூடப்படுகிறது

பிந்திய இணைப்பு : ஜூலை 10ம் திகதிவரை நகர்ப்புற பாடசாலைகள் மூடப்படுவதாக இலங்கை அரசாங்கம் தெரிவித்துள்ளது. கொழும்பு வலய அனைத்துப் பாடசாலைகள் மற்றும் நாட்டின் ஏனைய மாகாணங்களிலுள்ள நகர்ப்புற பாடசாலைகளை இன்றிலிருந்து(27) ஜூலை முதலாம் திகதிவரை மூடுவதாக கல்வி அமைச்சு முடிவெடுத்துள்ளது. நாட்டில் ஏற்பட்டுள்ள கடும் எரிபொருள் பற்றாக்குறையினால் ஆசிரியர்கள், மாணவர்களின் போக்குவரத்தில் ஏற்பட்டுள்ள நெருக்கடிகள் காரணமாகவே...

70% எரிபொருள் நிரப்பு நிலையங்கள் தற்காலிகமாக மூடப்படுகிறது

இலங்கையில் ஏற்பட்டுள்ள பாரிய எரிபொருள் தட்டுப்பாட்டினால் சுமார் 70 வீதமான எரிபொருள் நிரப்பு நிலையங்கள் மூடப்படுகின்றன. ஒரு மாத காலமாகியும் போதியளவு எரிபொருள் கிடைக்கப்பெறவில்லை, இதனால் 70 வீதமான எரிபொருள் நிரப்பு நிலையங்களை தற்காலிகமாக மூடவேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது என எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர் சங்கத்தின் தலைவர் தெரிவித்துள்ளார். மேலும் எரிபொருள் நிரப்பு நிலையங்களைப் பாதுகாப்பதிலும்...

இதுவரையில் சட்டவிரோதமாக நாட்டைவிட்டு செல்ல முயன்ற 399பேர் கைது

கடந்த ஆறு மாத காலத்தில் இலங்கையிலிருந்து சட்டவிரோதமாக ஆஸ்திரேலியா செல்ல முயற்சித்த 399 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக இலங்கை காவல்துறையினர் தெரிவித்துள்ளார். விசாரணைகளின்போது, ஆட்கடத்தல்காரர்கள் படகு மூலம் ஆஸ்திரேலியா செல்ல இரண்டு இலட்சம் ரூபாய் முதல் பத்து இலட்சம் ரூபாய்வரை கட்டணங்கள் அறவிட்டுள்ளதாகவும், ஆபத்து நிறைந்த கடற்பயணத்திற்கு பழைய மற்றும் உடைந்த படகுகளைப் பயன்படுத்தியமையும் தெரியவந்துள்ளதாக...

About Me

Puthinam NEWS brings you the latest news and the global headlines in Tamil language.
1130 POSTS
0 COMMENTS
- Advertisement -spot_img

Latest News

மாவையின் உடல் தீயுடன் சங்கமம்

தமிழரசுக் கட்சியின் சிரேஷ்ட தலைவரும், முன்னாள் யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜாவின் இறுதிக் கிரிகைகள் இன்று (02/02) இடம்பெற்று, பூதவுடல் மாவிட்டபுரம் இந்து...
- Advertisement -spot_img