புதினம்
National news
சீனாவிலிருந்து இலங்கைக்கு டீசல்
புதினம் -
இலங்கை சீனாவிடமிருந்து டீசலை எதிர்பார்த்துள்ளதாக எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்துத் தெரிவித்த அமைச்சர் காஞ்சன விஜேசேகர, இம்மாதம் இறுதியில் ஒரு கப்பல் டீசல் இலங்கையை வந்தடையும் என தாம் எதிர்பார்ப்பதாகத் தெரிவித்துள்ளார். இந்த ஆண்டின் தொடக்கத்தில் இலங்கை கடும் பொருளாதார நெருக்கடியை சந்தித்தபோது, இந்திய கடன் உதவியில் தேவையான எரிபொருட்களை...
Local news
அகிம்சை போராளி தியாக தீபம் திலீபனின் 35வது ஆண்டு நினைவு தினம்
புதினம் -
இலங்கை இந்திய வல்லாதிக்க அரசாங்கங்களுக்கு எதிராக ஐந்து அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து, அகிம்சை வழியில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு, 12 நாட்களின் பின்னர் வீரச்சாவைத் தழுவிய தியாக தீபம் திலீபனின் 35வது நினைவு தினம் இன்றாகும் (26/09/2022). ஐந்து அம்ச கோரிக்கைகளாவன,1) மீளக்குடியமர்தல் என்ற பெயரில் இலங்கைத்தீவின் வடக்கு கிழக்கு மாகாணங்களில் புதிதாக திட்டமிடப்படும் குடியேற்றங்களைத் தடுத்து நிறுத்தவேண்டும்....
World News
இலங்கையில் நோர்வே தூதரகம் மூடப்படுகிறது
புதினம் -
இலங்கையிலுள்ள நோர்வே தூதரகம் 2023 ஜூலை மாதம் மூடுப்படவுள்ளதாக நோர்வே வெளிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. வெளிநாட்டு தூதரக கட்டமைப்பில் பாரிய மாற்றங்களை மேற்கொள்ளவுள்ள நோர்வே, மொத்தமாக ஐந்து தூதரகங்களை மூடவுள்ளதாக தெரிவித்துள்ளது. இலங்கை (கொழும்பு), ஸ்லோவாக்கியா (பிராடிஸ்லாவா), கொசோவா (பிரிஸ்டீனா), மடகாஸ்கார் (அண்டானாரிவோ) நாடுகளில் அமைந்துள்ள தூதுரகங்களும், மற்றும் அமெரிக்காவின் ஹூஸ்டன் நகரில் அமைந்துள்ள இணைத்தூதரகமும்...
National news
ஜீன் மாதத்தில் மட்டும் 125 இலங்கையர்களை நாடு கடத்திய ஆஸ்திரேலியா
புதினம் -
சட்டவிரோதமாக படகு மூலம் ஆஸ்திரேலியாவினுள் நுழைய முற்பட்ட 125 இலங்கையர்கள் இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டுள்ளனர். கடந்த ஜூன் மாதத்தில் மட்டும், ஆஸ்திரேலியாவினுள் நுழைய முற்பட்ட நான்கு படகுகளை ஆஸ்திரேலிய எல்லைப் பாதுகாப்புப்படையினர் வழிமறித்துள்ளனர். படகில் வந்த அனைவரையும் (மொத்தமாக 125பேர்) பாதுகாப்பாக விமானம் மூலம் இலங்கைக்கு நாடு கடத்தியுள்ளனர். இலங்கையில் ஏற்பட்டுள்ள பாரிய பொருளாதார நெருக்கடியால் மக்கள்...
National news
கோத்தாவாக மாறிய ரணில் 📷 🎥
புதினம் -
புதிய ஜனாதிபதியாகப் பதவியேற்று 24 மணிநேரத்தினுள் ரணில் விக்கிரமசிங்க கோத்தபாய ராஜபக்சவாக மாறியுள்ளார். நிறைவேற்று அதிகாரமுடைய ஜனாதிபதியாக ரணில் செய்த முதல் வேலை, மக்களின் பொது பாதுகாப்பை மேற்கொள்ள முப்படையினரை அழைக்கும் விதத்தில் அதி விஷேட வர்த்தமானியை வெளியிட்டதுதான். ஆர்ப்பாட்டக்காரர்களை அகற்றுவதாகத் தெரிவித்து, சொந்த இன மக்கள் மீதே கொடூரமாகத் தாக்குதல்களை நடத்தி பத்திற்கும் மேற்பட்ட மக்களை...
National news
காலிமுகத்திடல் ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது படையினர் தாக்குதல் 🎥
புதினம் -
முன்னாள் ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச்சவை பதவி விலகக்கோரி ஆரம்பிக்கப்பட்ட காலிமுதத்திடல் ஆர்ப்பாட்டம், புதிய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பதவியேற்ற பின்னரும் அமைதியான முறையில் தொடர்ந்து இடம்பெற்று வந்தது. ஆர்ப்பாட்டக்காரர்களை அகற்ற, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பல நூற்றுக்கணக்கான இராணுவம் மற்றும் விஷேட அதிரடிப்படையினரை ஏவி விட்டுள்ளார். படையினரும் கடும் பலத்தைப் பிரயோகித்து ஆர்ப்பாட்டக்காரர்களின் கூடாரங்களை அழித்து,...
National news
ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதியாகத் தெரிவானார்
புதினம் -
பாராளுமன்றில் இன்று(20/02) இடம்பெற்ற ஜனாதிபதியினைத் தெரிவு செய்யும் வாக்கெடுப்பில் பதில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க 134 வாக்குகளைப் பெற்று வெற்றிபெற்றுள்ளார். ஜனாதிபதி பதவிக்காக பதில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, பொதுஜனபெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெரும மற்றும் மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அநுர குமார திசாநாயக்கா ஆகியோர் போட்டியிட்டுருந்தனர். போட்டியாளர்கள் பெற்ற வாக்குகளின் விபரம்.ரணில் விக்கிரமசிங்க...
National news
கோத்தபாய ராஜபக்ச இராஜினாமா செய்துள்ளார் – மாலைதீவு சபாநாயகர்
புதினம் -
இலங்கை ஜனாதிபதி இராஜினாமா செய்துவிட்டார் என மாலைதீவு சபாநாயகர் மொஹமெட் நஷீட் உறுதிப்படுத்தியுள்ளார். ஜனாதிபதி இலங்கையில் இருந்திருந்தால் உயிருக்கு அஞ்சி இராஜினாமா செய்திருக்க மாட்டார் என குறிப்பிட்டுள்ள மாலைதீவு சபாநாயகர், மாலைதீவு அரசாங்கத்திற்கும் நன்றி தெரிவித்துள்ளார். இதேவேளை ஜனாதிபதியின் இராஜினாமாக் கடிதம் இலங்கை சபாநாயகருக்கு கிடைக்கப்பெற்றுள்ளதாகவும், இன்னும் ஒரு சில மணிநேரத்தில் ஜனாதிபதியின் இராஜினாமா தொடர்பான...
Articles
படையினரை நம்பும் ரணில்
புதினம் -
பதில் ஜனாதிபதியாக நியமிக்கப்பட்டுள்ள ரணில் விக்ரமசிங்க முப்படையினரின் உதவியை நாடியிருப்பதாகத் தெரிவித்துள்ளார். மக்களின் எதிர்ப்பு அதிகரித்துள்ள நிலையில், நிலைமையைக் கட்டுப்படுத்த முடியாமல் இருப்பதால், அமைதி நிலையை உருவாக்கும் பொறுப்பை முப்படையினரிடம் ஒப்படைத்துள்ளார் பதில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க. இதுவரையில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டங்களின்போது வெளிக்காட்டப்படாத எதிர்ப்பு படையினரிடமிருந்து நேற்று(13/07) வெளிப்பட்டது. படையினரின் எதிர் தாக்குதலால் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஒரு...
National news
நாடு முழுவதும் அவசரகாலச் சட்டம், மேல் மாகாணத்தில் ஊரடங்குச் சட்டம் 🎥
புதினம் -
ஜனாதிபதியாக பதவியேற்பார் என எதிர்பார்க்கப்படும் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை பதவி விலகக்கோரி பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்று கொழும்பு (f)பிளவர் வீதியில் இடம்பெற்றுக்கொண்டிருக்கிறது. ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது கண்ணீர்ப் புகைத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது. இருப்பினும் மக்கள் பிரதமர் அலுவலகத்தின் முன் தொடர்ந்தும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவண்ணம் உள்ளனர். நிலைமைகளைக் கட்டுப்படுத்த மேல் மாகாணத்தில் ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதேவேளை நாடுதழுவியரீதியில்...
About Me
Puthinam NEWS brings you the latest news and the global headlines in Tamil language.
1130 POSTS
0 COMMENTS
Latest News
மாவையின் உடல் தீயுடன் சங்கமம்
தமிழரசுக் கட்சியின் சிரேஷ்ட தலைவரும், முன்னாள் யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜாவின் இறுதிக் கிரிகைகள் இன்று (02/02) இடம்பெற்று, பூதவுடல் மாவிட்டபுரம் இந்து...
