புதினம்
National news
எரிபொருட்களைப் பதுக்கிய 675பேர் கைது
புதினம் -
இலங்கையில் ஏற்பட்டிருக்கும் எரிபொருள் தட்டுப்பாட்டினால், பலர் சட்டவிரோதமாக பதுக்கல் நடவடிக்கைகளை ஆரம்பித்திருந்தார்கள். நாடு முழுவதும் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின்போது, எரிபொருள் பதுக்கலில் ஈடுபட்ட 675பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளதாகத் தெரிவித்துள்ளனர். மேற்படி நபர்களிடமிருந்து,🔴டீசல் - 33,400 லீற்றர்🔴பெற்றோல் - 21,600 லீற்றர்🔴மண்ணெண்ணை - 11,000 லீற்றர் எரிபொருட்களை காவல்துறையினர் கைப்பற்றியுள்ளனர்.
National news
தமிழக மக்களின் இரண்டாம் கட்ட நிவாரணப் பொருட்கள் இலங்கையை வந்தடைந்தது
புதினம் -
கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் இலங்கை மக்களுக்கு, தமிழக மக்களினால் வழங்கப்பட்ட நிவாரணப் பொருட்களின் இரண்டாம் கட்ட பொருட்களை ஏற்றிய கப்பல் இலங்கையை வந்தடைந்துள்ளது. மேற்படி நிவாரணப் பொருட்களை இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே இலங்கை அரசிடம் கையளித்திருந்தார். தமிழக மக்களால் அன்பளிப்பாக வழங்கப்படும் 40,000 மெற்றிக் தொன் அரிசி மற்றும் 500 மெற்றிக்...
National news
அமெரிக்க ஜனாதிபதியைச் சந்தித்த இலங்கை தூதுவர்
புதினம் -
அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனை இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் மகிந்த சமரசிங்க சந்தித்துள்ளார். இலங்கையின் தற்போதைய பொருளாதார நெருக்கடி மற்றும் அரசியல் நிலைமைகள் தொடர்பான விளக்கங்களை அமெரிக்க ஜனாதிபதிக்கு மகிந்த சமரசிங்க வழங்கியுள்ளார். இதேவேளை அமெரிக்க திறைசேரி மற்றும் இராஜாங்க திணைக்களங்களைச் சேர்ந்த உயர் மட்ட தூதுக்குழுவினர் மூன்று நாள் விஜயத்தினை மேற்கொண்டு நாளை (26/06)...
Local news
பாலியல் துஷ்பிரயோக குற்றச்சாட்டில் முல்லைத்தீவில் ஆசிரியர் மாணவர்கள் உட்பட பலர் கைது
புதினம் -
முல்லைத்தீவில் ஆசிரியர் ஒருவர் உட்பட பல மாணவர்கள் பாலியல் துஷ்பிரயோக குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டனர். இதில் ஆசிரியரும், மாணவர் ஒருவரும் வரும் 30ம் திகதிவரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதோடு, ஐந்து மாணவர்கள் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும் பலரை காவல்துறையினர் தேடி வருவதாகவும் அறிய முடிகிறது. பல இளவயது மாணவர்களைப் பயன்படுத்தி, மாணவிகளை பாலியல் துஷ்பிரயோகம்...
Local news
தமிழ்நாடு-யாழ்ப்பாணம் சரக்கு படகுச் சேவைக்கு பாதுகாப்பு அமைச்சு அனுமதி
புதினம் -
யாழ்ப்பாணம்-தமிழ்நாடு சரக்கு படகுச் சேவைகளுக்கு இலங்கை பாதுகாப்பு அமைச்சு அனுமதி வழங்கியுள்ளதாக மீன்பிடி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணம் காங்கேசன்துறை துறைமுகத்திற்கும், தமிழ்நாடு பாண்டிச்சேரி மற்றும் காரைக்கால் துறைமுகங்களிற்குமிடையிலான சரக்கு படகுச் சேவைக்கே பாதுகாப்பு அமைச்சு அனுமதி வழங்கியுள்ளதாக தெரிவித்துள்ள அமைச்சர், இந்த படகுச் சேவை மூலம் இலகுவாக அத்தியாவசிய பொருட்கள், உரம் மற்றும்...
National news
தம்மிக்க பெரேரா அமைச்சராக பதவியேற்றார்
புதினம் -
இலங்கையின் பிரபல தொழிலதிபரும், பொதுஜன பெரமுணவின் தேசிய பட்டியல் பாராளுமன்ற உறுப்பினருமான தம்மிக்க பெரேரா முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சராக ஜனாதிபதி முன்னிலையில் பதவியேற்றுள்ளார். அண்மையில் புதிதாக உருவாக்கப்பட்ட முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சிற்கு தம்மிக்க பெரேராவை நியமிப்பதன் மூலம், பல மேற்குலக நாட்டு முதலீட்டாளர்களை இலங்கையில் முதலீடு செய்ய ஊக்குவிக்க முடியுமென இலங்கை அரசாங்கம் நம்புகின்றது. இருப்பினும் இந்திய-சீன...
World News
படகு மூலம் வருபவர்கள் ஆஸ்திரேலியாவில் குடியேற்றப்பட மாட்டார்கள்
புதினம் -
படகு மூலம் வருபவர்கள் ஆஸ்திரேலியாவில் குடியேற்றப்பட மாட்டார்கள் என ஆஸ்திரேலியா பிரதமர் அன்ரனி அல்பனீஸி உறுதியாகத் தெரிவித்துள்ளார். புகலிடக் கோரிக்கையாளர்கள் தொடர்பான ஆஸ்திரேலிய அரசாங்கத்தின் கொள்கை மிகத் தெளிவானது என குறிப்பிட்ட ஆஸ்திரேலியா பிரதமர், எந்தவொரு சந்தர்ப்பத்திலும் சட்டவிரோதமாக படகு மூலம் வருபவர்கள் ஆஸ்திரேலிய நாட்டில் குடியேற்றப்பட மாட்டார்கள் எனவும் தெரிவித்துள்ளார். அண்மையில் தேர்தலில் வெற்றி பெற்று...
National news
50 மில்லியன் டொலர்கள் பெறுமதியான உதவிகளை வழங்கும் ஆஸ்திரேலியா
புதினம் -
பொருளாதார நெருக்கடியால் இலங்கையில் பாரிய உணவுத் தட்டுப்பாடு மற்றும் மருத்துவ பொருட்களுக்கான தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. அவசர உணவு மற்றும் மருத்துவ தேவைகளுக்காக ஆஸ்திரேலிய அரசாங்கம் 50 மில்லியன் டொலர்கள் பெறுமதியான உதவிகளை இலங்கைக்கு வழங்குகின்றது. முதற்கட்டமாக 22 மில்லியன் டொலர்களை ஐக்கிய நாடுகள் உலக உணவுத் திட்டத்திற்கு (WFP) ஆஸ்திரேலியா வழங்குகின்றது. இதன் மூலம் WFP...
National news
16 உணவுப் பொருட்கள் அத்தியாவசிய உணவுப் பொருட்களாக இனம் காணப்பட்டுள்ளது
புதினம் -
இலங்கை வர்த்தக அமைச்சினால் பினவரும் 16 வகையான உணவுப் பொருட்களும் அத்தியாவசிய உணவுப் பொருட்களாக இனம் காணப்பட்டுள்ளது. 1.சம்பா அரிசி 2.நாட்டரிசி 3.பச்சை அரிசி 4.சீனி 5.பருப்பு 6.கோதுமை மா 7.மீன் 8.முட்டை 9.நெத்தலி 10.ரின் மீன் 11.கோழி இறைச்சி 12.கடலை 13.பால் மா 14.பெரிய வெங்காயம் 15.செத்தல் மிளகாய் 16.உருளைக் கிழங்கு
Soccer
FIFA உலககிண்ண கால்பந்து போட்டிகளில் விளையாட ஆஸ்திரேலிய அணி தகுதி
புதினம் -
FIFA உலக கிண்ண தகுதிகாண் போட்டியில் ஆஸ்திரேலிய கால்பந்தாட்ட அணி, பெரு நாட்டை வென்று உலக கிண்ண போட்டியில் விளையாட தகுதி பெற்றுள்ளது. பெனால்டி முறையில் 5 : 4 என்ற கோல் என்ற விகிதத்தில் ஆஸ்திரேலிய அணி பலம்வாய்ந்த பெரு அணியை வென்றுள்ளது. இறுதிவரை சிறப்பாக விளையாடிய இரு அணிகளும் 90 நிமிட முடிவில்...
About Me
Puthinam NEWS brings you the latest news and the global headlines in Tamil language.
1130 POSTS
0 COMMENTS
Latest News
மாவையின் உடல் தீயுடன் சங்கமம்
தமிழரசுக் கட்சியின் சிரேஷ்ட தலைவரும், முன்னாள் யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜாவின் இறுதிக் கிரிகைகள் இன்று (02/02) இடம்பெற்று, பூதவுடல் மாவிட்டபுரம் இந்து...
