70% எரிபொருள் நிரப்பு நிலையங்கள் தற்காலிகமாக மூடப்படுகிறது

இலங்கையில் ஏற்பட்டுள்ள பாரிய எரிபொருள் தட்டுப்பாட்டினால் சுமார் 70 வீதமான எரிபொருள் நிரப்பு நிலையங்கள் மூடப்படுகின்றன.

ஒரு மாத காலமாகியும் போதியளவு எரிபொருள் கிடைக்கப்பெறவில்லை, இதனால் 70 வீதமான எரிபொருள் நிரப்பு நிலையங்களை தற்காலிகமாக மூடவேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது என எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர் சங்கத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.

மேலும் எரிபொருள் நிரப்பு நிலையங்களைப் பாதுகாப்பதிலும் பாரிய சிக்கல் நிலை தோன்றியுள்ளது. காவல்துறையினரால் அனைத்து நிலையங்களுக்குமான பாதுக்காப்பை வழங்க முடியாது. எனவே இராணுவ பாதுகாப்பை வழங்குமாறு எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர் சங்கம் அரசாங்கத்திடம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

ரணில் விக்கிரமசிங்க பதவியேற்றும் நாட்டில் இன்னும் பொருளாதார சிக்கல் சீராகவில்லை என்பதுடன், மக்கள் அன்றாடம் எதிர்கொள்கின்ற கஷ்டங்களில் ஒரு சதவீதமேனும் குறையவில்லை என்பதும் இங்கே சுட்டிக்காட்டப் படவேண்டியுள்ளது.

Latest articles

Similar articles