யூரியா மற்றும் சமையல் எரிவாயு கப்பல்கள் நாட்டை வந்தடைந்துள்ளன

இந்தியாவிலிருந்து 44,000 மெற்றிக் தொன் யூரியா பசளையை ஏற்றிய கப்ப்ல இலங்கையை வந்தடைந்துள்ளது.

இந்திய கடன் உதவி திட்டத்தின் கீழ் வழங்கபடவுள்ள 65,000 மெற்றிக் தொன் யூரியா பசளையில், முதற்கட்டமாக 44,000 மெற்றிக் தொன் தற்போது நாட்டை வந்தடைந்துள்ளது. மிகுதி 21,000 மெற்றிக் தொன் யூரியா ஒரு மாதகாலத்தினுள் இலங்கையை வந்தடையும் என விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.

சமையல் எரிவாயுவுடன் வரும் மூன்று கப்பல்கள்

இதேவேளை 3,700 மெற்றிக் தொன் எரிவாயுவை ஏற்றிய கப்பல் நேற்று (10/07) இலங்கையை வந்தடைந்ததுள்ளது.

இன்றும் (11/07), வரும் 15ம் திகதியும் இரு கப்பல்கள் மொத்தமாக 6,940 மெற்றிக் தொன் சமையல் எரிவாயுவை ஏற்றியபடி நாட்டை வந்தடையவுள்ளன.

பிரபலமானவை