ஆழ்கடலில் தத்தளித்த 55பேரை மீட்ட கடற்படை 📷

australia sri lanka people smugglers

சட்டவிரோதமாக மீன்பிடி படகில் ஆஸ்திரேலியா சென்றுகொண்டிருந்தபோது புயலில் சிக்கி தத்தளித்துக்கொண்டிருந்த 55பேரை இலங்கை கடற்படையினர் மீட்டுள்ளனர்.

ஹம்பாந்தோட்டையிலிருந்து 390 கடல்மைல் தொலைவில் கடந்த 10ம் திகதி மேற்படி சம்பவம் இடம்பெற்றுள்ளது. மீட்கப்பட்டவர்களில் 46 ஆண்கள், 03 பெண்கள் மற்றும் 06 சிறுவர்கள் உள்ளடங்குவர்.

மீட்கப்பட்டவர்கள் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, மன்னார், வவுனியா, திருகோணமலை மற்றும் கற்பிட்டி பிரதேசங்களைச் சேர்ந்தவர்களாவர்.

படகு மூலம் சட்டவிரோதமாக ஆஸ்திரேலியா வருபவர்களுக்கு புகலிடம் வழங்கப்படாது என ஆஸ்திரேலியா அரசாங்கம் மிகத் தெளிவாக தெரிவித்துள்ளமை இங்கே குறிப்பிடத்தக்கது.

srilanka boat australia hambantota
srilanka boat australia hambantota

Latest articles

Similar articles