புதினம்

இலங்கை தேயிலை இறக்குமதிக்கு ரஷ்யா தற்காலிக கட்டுப்பாடு

Srilanka tea Russia இலங்கையிலிருந்து இறக்குமதி செய்யப்படும் தேயிலை உட்பட விவசாய உற்பத்திப் பொருட்களுக்கு ரஷ்யா தற்காலிக கட்டுப்பாடு விதித்துள்ளது. அண்மையில் இறக்குமதி செய்த தேயிலையில் சிறிய பூச்சியொன்று கண்டுபிடிக்கப்பட்டதைத் தொடர்ந்தே ரஷ்யாவினால் இந்த தற்காலிக இறக்குமதி கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. ரஷ்யாவினால் மொத்தமாக இறக்குமதி செய்யப்படும் தேயிலையில், 23% இலங்கைத் தேயிலையாகும். கடந்த 10 மாதங்களில், $436 மில்லியன் பெறுமதியான...

ரோஹித் ஷர்மா​ அதிரடி, இந்திய அணி அபார வெற்றி

நட்சத்திர வீரர் ​ரோஹித் சர்மாவின் அபார துடுப்பாட்டத்தின் மூலம்​,​ இந்திய அணி இலங்கை​ அணிக்கெ​திரான இரண்டாவது போட்டியில் வெற்றிபெற்றது. இதன்மூலம்​ இந்திய அணி​ மூன்று போட்டிகள் கொண்ட தொடர​ரில்​ 1:1 என்ற​ விகிதத்தில்​ சமன் ​செய்துள்ளது. (​படம் : ESPN Cricinfo) ​இந்திய அணியின் தலைவரும், ஆரம்ப துடுப்பாட்ட வீரருமாகிய ​ரோஹித் ஷர்மா, 153 பந்துகளுக்கு ​முகம்...

கலைஞர் கருணாநிதி அண்ணா அறிவாலயத்திற்கு திடீர் விஜயம்

karunanidhi tamil nadu உடல்நலக்குறைவு காரணமாக ஓய்விலிருந்த திராவிட முன்னேற்ற கழகத் தலைவர் கலைஞர் கருணாநிதி (வயது 93), திடீரென அண்ணா அறிவாலயத்திற்கு விஜயம் செய்தார். கலைஞரின் இந்த விஜயம் தி.மு.க ஆதரவாளர்கள், தொண்டர்கள் என அனைவரையும் உற்சாகப்படுத்தியது. கடந்த ஒரு வருட காலமாக பூரண ஓய்விலிருந்த கலைஞர், சில வாரங்களுக்கு முன்னர் முரசொலி பத்திரிகை அலுவலகத்திற்கு...

ஆங்கில பிரீமியர் லீக் – 15 வருடகால சாதனை முறியடிப்பு

ஆங்கில பிரீமியர் லீக் கிண்ணத்துக்காக நடைபெறும் உதை​ப்ப​ந்தாட்டப் போட்டிகளில் இன்று (13/12) நடைபெற்ற போட்டியில், மான்செஸ்டர் சிற்றி​ அணி, சுவான்ஸி​ அணியை 4 : 0 கோல் கணக்கில் வெற்றி பெற்று, கடந்த 15 ஆண்டுகளாக ஆர்செனல் அணி தக்கவைத்திருந்த தொடர் வெற்றிச்சாதனையை முறியடித்துள்ளது. (படம் : மான்செஸ்டர் சிற்றி) 2002ம் ஆண்டு ஆர்செனல் அணி 14 ஆங்கில...

புகையிரத ஊழியர்களின் வேலை நிறுத்தம் முடிவிற்கு வந்தது

புகையிரத ஊழியர்களின் வேலை நிறுத்தம் முடிவிற்கு வந்தது. கடந்த ஏழு நாட்களாக தொடர்ந்த புகையிரத ஊழியர்களின் வேலை நிறுத்தம், நாலு பேர் கொண்ட அமைச்சரவைக்குழுவினர் மேற்கொண்ட பேச்சுவார்த்தைகளையடுத்து இன்று (13/12) முடிவிற்கு வந்தது.   இலங்கையில் புகையிரத சேவையை அத்தியாவசிய சேவையாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அறிவித்துள்ளார்.

2023ம் உலகக்கிண்ண கிரிக்கெட் தொடர் இந்தியாவில்

2023ம் நடைபெறவுள்ள 13வது உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டித் தொடர் இந்தியாவில் நடைபெறவுள்ளது. பத்து நாட்டு அணிகள் பங்குபெறும் இப்போட்டித் தொடர், 2023ம் ஆண்டு பிரப்ரவரி 23ம் திகதி முதல் மார்ச் 26ம் திகதிவரை நடைபெறவுள்ளது. இதற்கு முன்னர் நடைபெற்ற 1987, 1996 மற்றும் 2011 ஆகிய உலகக்கிண்ண தொடர்களை இந்தியா மற்ற நாடுகளுடன் இணைந்து நடத்தியது. ஆனால் 2023ம்...

வறுமை கூடிய மாவட்டமாக கிளிநொச்சி மாவட்டம்

2016ஆம் ஆண்டின் தரவுகளின் பிரகாரம் நாட்டில் 18.2% வறுமைக்குறிகாட்டியை பதிவு செய்து, வறுமை அதிகூடிய மாவட்டமாக கிளிநொச்சி மாவட்டம் காணப்படுகிறது. 12.7% பதிவுடன் முல்லைத்தீவு மாவட்டம் இரண்டாம் இடத்திலும், 7.7% பதிவுடன் யாழ்ப்பாணம் ஐந்தாம் இடத்திலும் காணப்படுகிறது. வடக்கு மாகாண சபையின் ஐந்தாவதும், இறுதியுமான வரவு செலவு திட்டடத்தை சபையில் சமர்ப்பித்து உரையாற்றும்போது முதலமைச்சர் விக்னேஸ்வரன் மேற்கண்ட...

தற்போதைய சூழலில் பேரறிவாளனை விடுவிக்க முடியாது – உயர் நீதிமன்றம்

முன்னாள் இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற பேரறிவாளனை தற்போதைய சூழ்நிலையில் விடுவிக்க முடியாது என உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. தனக்கு விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனையை நிறுத்தி வைக்க கோரி பேரறிவாளன் சார்பில் உயர் நீதிமன்றத்தில் புதிய மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில் “வெடிகுண்டில் வைக்கப்பட்ட பட்டரி...

காங்கிரஸ் கட்சியின் தலைவராக ராகுல் காந்தி

இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் தலைவராக ராகுல் காந்தி தெரிவு செய்யப்பட்டுள்ளார். 47 வயதாகும் ராகுல் காந்தி, கடந்த 19 வருடங்களாக அவரது தாயார் சோனியா காந்தி வகித்து வரும் கட்சித்தலைவர் பதவியை டிசம்பர் 16ம் திகதி முதல் பொறுப்பேற்கவுள்ளார். தனது பாட்டி இந்திரா காந்தி படுகொலைக்குப் பின்னர், தன் பள்ளிப் படிப்பை வீட்டிலிருந்தே முடித்த ராகுல் காந்தி,...

ISக்கு எதிரான போர் முடிந்து விட்டது – ஈராக்

சிரியாவில் IS பயங்கரவாதிகளை அழிக்கும் நடவடிக்கை முடிந்துவிட்டதாக ரஷ்ய இராணுவம் அறிவித்த 2 நாட்களின் பின்னர், IS பயங்கரவாதிகளுக்கு எதிரான போர் முடிந்துவிட்டதாக ஈராக்கும் அறிவித்துள்ளது. ஈராக்-சிரியா எல்லையின் முழுக் கட்டுப்பாட்டையும் ஈராக்கிய படைப்பிரிவுகள் பெற்றிருப்பதாக பாக்தாத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் பிரதமர் ஹைய்தர் அல்-அபாதி தெரிவித்திருக்கிறார். ஒரு கோடி மக்கள் மீது தங்களின் ஆட்சியை திணித்த...

About Me

Puthinam NEWS brings you the latest news and the global headlines in Tamil language.
1130 POSTS
0 COMMENTS
- Advertisement -spot_img

Latest News

மாவையின் உடல் தீயுடன் சங்கமம்

தமிழரசுக் கட்சியின் சிரேஷ்ட தலைவரும், முன்னாள் யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜாவின் இறுதிக் கிரிகைகள் இன்று (02/02) இடம்பெற்று, பூதவுடல் மாவிட்டபுரம் இந்து...
- Advertisement -spot_img