புதினம்

இலங்கை அணி 205 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கட்டுகளையும் இழந்தது

நாக்பூரில் நேற்று (24-11) ஆரம்பமான இந்தியா மற்றும் இலங்கை அணிகள் மோதும் இரண்டாவது டெஸ்ட் போட்டியில், முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 205 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கட்டுக்களையும் இழந்தது. நாணய சுழற்சியில் வென்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது. அதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி,இந்திய அணியின் சுழல் பந்துவீச்சாளர்களுக்கு ஈடுகொடுக்க முடியாமல் 205...

முல்லைத்தீவில் பாடசாலை மாணவர்களுக்கு ஆபாச வீடியோக்களை விநியோகித்த கும்பல் கைது

முல்லைத்தீவில் பாடசாலை மாணவர்களுக்கு ஆபாச வீடியோக்களை கைப்பேசிகளில் பதிவேற்றிக் கொடுத்த கும்பலை இலங்கை காவல்துறையினர் கைதுசெய்துள்ளனர். கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களிடமிருந்து கைப்பற்றப்பட்ட கைத்தொலைபேசிகள் மற்றும் மடிக்கணினியில் ஆயிரக்கணக்கான தமிழ், சிங்கள ஆபாச படங்கள் இருந்துள்ளன. இக்கும்பலானது மாணவர்ககளின் கைப்பேசிகளுக்கு ஆபாச படங்களை பரிமாற்ற நூறு ருபாய் வீதம் அறவிட்டுள்ளமையும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தமிழர் பிரதேசங்களில் இவ்வாறான தரங்கெட்ட செயல்கள்...

மாவீரர்களுக்கு வடமாகாண சபையில் அஞ்சலி செலுத்த அனுமதி மறுப்பு

தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் உயிர் நீத்த தமிழீழ விடுதலைப் புலிகளின் உறுப்பினர்களுக்கு, மாவீரர் தினத்தை முன்னிட்டு வடக்கு மாகாண சபைக்குள் அஞ்சலி செலுத்த வேண்டும் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர் ஆனோல்ட் அவர்களினால் அவைத் தலைவர் சி.வி.கே.சிவஞானத்திடம் விடுக்கப்பட்ட கோரிக்கை அவைத்தலைவரினால்  நிராகரிக்கப்பட்டுள்ளது. மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்த வேண்டுமாயின், தனித்தனியாக சபைக்கு வெளியில் அஞ்சலி செலுத்துமாறு...

​எகிப்தில் பள்ளிவாசல் மீதான தாக்குதலில் 235 பேர் பலி

எகிப்தின் சினாய் மாநிலத்திலுள்ள பள்ளிவாசல் ஒன்றின் மீது இன்று வெள்ளிக்கிழமை இஸ்லாமிய தீவிரவாதிகள் நடத்திய துப்பாக்கிச்சூடு மற்றும் குண்டுத்தாக்குதலில் 235ற்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர்.​ மேலும் பல நூற்றுக்கணக்கானவர்கள் காயமடைந்துள்ளனர். இறந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது.

இந்திய இலங்கை பிரதமர்கள் சந்திப்பு

இந்திய பிரதமர் நரேந்திர மோடி இலங்கைப் பிரதமர் ரணில் விக்கிரமசிங்காவை இன்று (23/11) புது டில்லியில் சந்தித்தார். நான்கு நாள் உத்தியோகபூர்வ பயணமாக கடந்த செவ்வாய்க்கிழமை இந்தியாவிற்கு பயணம் மேற்கொண்ட திரு.ரணில் விக்கிரமசிங்க, இந்தியப் பிரதமருடன் இருதரப்பு பேச்சுவார்த்தையில் ஈடுபடுகிறார். இதன்போது வணிக மற்றும் பாதுகாப்பு உறவுகளை மேலும் மேம்படுத்துதல், இலங்கை கடற்பரப்பில் சீன கடற்படையின் ஆதிக்கம்,...

இரட்டை இலை சின்னம் ஓ.பி.எஸ்-இ.பி.எஸ் அணிக்கு – தேர்தல் ஆணையம்

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவிற்கு பின்னர் அதிமுக பல அணிகளாக பிரிந்ததால், இரட்டை இலை சின்னம் யாருக்கு என்பது குறித்த சர்ச்சை எழுந்தது. இதுகுறித்து அனைத்து அணிகளும் தேர்தல் ஆணையத்தில் புகார் கொடுத்த நிலையில், கடந்த சில மாதங்களாக தேர்தல் ஆணையம் இதுகுறித்து விசாரணை செய்து வந்தது. ஏழு முறை இருதரப்பையும் அழைத்து தேர்தல் ஆணையம்...

போர்க்குற்றம் புரிந்த இராணுவத்தளபதிக்கு சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் ஆயுள் தண்டனை

1995ல் பொஸ்னியாவின் சிரேபிராணிகா என்ற இடத்தில் 7000ற்கும் மேற்பட்ட பொஸ்னியாக் இன ஆண்களை இனப்படுகொலை செய்த குற்றத்திற்காக முன்னாள் பொஸ்னியா ராணுவத்தளபதி ராட்கோ மிலாடிக்கிற்கு (வயது 74) இன்று (22-11-2017) சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் ஆயுள் தண்டனை வழங்கி தீர்ப்பளித்துள்ளது. இவர் போர்க்குற்றம், இனப்படுகொலை குற்றத்திற்காக கடந்த 2011ம் ஆண்டு கைது செய்யப்பட்டிருந்தார். இரண்டாம் உலக யுத்தத்திற்கு...

17 ஆண்டுகளின் பின்னர் உலக அழகி பட்டத்தை வென்ற இந்திய அழகி

118 நாடுகளைச் சேர்ந்த அழகிகள் பங்குபற்றிய 2017ம் ஆண்டிற்கான உலக அழகிப் போட்டி, கடந்த நவம்பர் 18ம் திகதி தெற்கு சீனாவின் சான்யா நகரில் நடைபெற்றது. இப்போட்டியில் இந்தியாவின் ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்த, 20 வயதான மனுஷி சில்லர் (Manushi Chhillar) உலக அழகிப் பட்டத்தை வென்றார். இவர் ஒரு மருத்துவதுறை மாணவியாவார். பதினேழு வருடங்களின் பின்னர்...

யாழ் குடாநாட்டில் 41பேர் கைது

sword attacks jaffna யாழ் குடாநாட்டில் அண்மையில் இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவங்களையடுத்து, இலங்கை காவல்துறையினரால் மேற்கொள்ளப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கையின்போது, பல்வேறு இடங்களில் 41பேர் வரையில் கைது செய்யப்பட்டுள்ளதாக, காவல்துறைப் பேச்சாளர் ​SP.ருவான் குணசேகரா தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் குறிப்பிடுகையில், கோப்பாய், மானிப்பாய், சுன்னாகம் மற்றும் யாழ்ப்பாணம் காவல்துறை பிரிவுகளில் கடந்த இரு நாட்களாக...

About Me

Puthinam NEWS brings you the latest news and the global headlines in Tamil language.
1072 POSTS
0 COMMENTS
- Advertisement -spot_img

Latest News

முதல் ஆறு மாதங்களில் 6 இலட்சம் சுற்றுலாப் பயணிகள்

இவ்வாண்டு முதல் ஆறு மாத காலப்பகுதியில் சுமார் 608,489 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வந்துள்ளனர். இந்தியா, ரஷ்யா, பிரித்தானியா, அமெரிக்கா, சீனா, ஆஸ்திரேலியா, பிரான்ஸ் மற்றும் கனடா...
- Advertisement -spot_img