Srilanka tea Russia
இலங்கையிலிருந்து இறக்குமதி செய்யப்படும் தேயிலை உட்பட விவசாய உற்பத்திப் பொருட்களுக்கு ரஷ்யா தற்காலிக கட்டுப்பாடு விதித்துள்ளது.
அண்மையில் இறக்குமதி செய்த தேயிலையில் சிறிய பூச்சியொன்று கண்டுபிடிக்கப்பட்டதைத் தொடர்ந்தே ரஷ்யாவினால் இந்த தற்காலிக இறக்குமதி கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.
ரஷ்யாவினால் மொத்தமாக இறக்குமதி செய்யப்படும் தேயிலையில், 23% இலங்கைத் தேயிலையாகும். கடந்த 10 மாதங்களில், $436 மில்லியன் பெறுமதியான 141,300 மெட்ரிக் தொன் தேயிலையை ரஷ்யா இறக்குமதி செய்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.