ISக்கு எதிரான போர் முடிந்து விட்டது – ஈராக்

சிரியாவில் IS பயங்கரவாதிகளை அழிக்கும் நடவடிக்கை முடிந்துவிட்டதாக ரஷ்ய இராணுவம் அறிவித்த 2 நாட்களின் பின்னர், IS பயங்கரவாதிகளுக்கு எதிரான போர் முடிந்துவிட்டதாக ஈராக்கும் அறிவித்துள்ளது.

ஈராக்-சிரியா எல்லையின் முழுக் கட்டுப்பாட்டையும் ஈராக்கிய படைப்பிரிவுகள் பெற்றிருப்பதாக பாக்தாத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் பிரதமர் ஹைய்தர் அல்-அபாதி தெரிவித்திருக்கிறார்.

ஒரு கோடி மக்கள் மீது தங்களின் ஆட்சியை திணித்த இந்த பயங்கரவாத குழுவானது, 2014ம் ஆண்டு சிரியாவிலும், ஈராக்கிலும் பெரும் பகுதியை கைப்பற்றியிருந்தது. கடந்த ஜூலை மாதம் ஈராக்கின் இரண்டாவதுவது நகரான மொசூலையும், ISன் நடைமுறை தலைநகராமாக விளங்கிய சிரியாவின் வட பகுதியில் இருக்கும் ரக்காவையும் இழந்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

சில IS பயங்கரவாதிகள் சிரியாவின் நாட்டுப்புறங்களுக்கும், சிலர் துருக்கி எல்லையை கடந்தும் தப்பிவிட்டதாக நம்பப்படுகிறது.

 

Latest articles

Similar articles