வெளிநாடு செல்லும் மருத்துவர்கள், பொறியியலாளர்கள் தொடர்பில் கடும் நடவடிக்கை – ஜனாதிபதி

வெளிநாடு செல்லும் மருத்துவர்கள் மற்றும் பொறியியலாளர்கள் தொடர்பில் பாராளுமன்றம் ஊடாக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பாராளுமன்றில் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் அரச செலவில் மருத்துவம், பொறியியல் கற்கை நெறிகள் மற்றும் பயிற்சிகளை முடித்துவிட்டு, சொந்த நாட்டிற்கு சேவைகளை வழங்காது, வெளிநாடு செல்லும் மருத்துவர்கள் மற்றும் பொறியியலாளர்கள் தொடர்பிலேயே கடும் நடவடிக்கைகள் எடுக்கப்படவுள்ளதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

ஒரு மருத்துவ மாணவரின் மருத்துவ கற்கை மற்றும் பயிற்சி நெறிகளுக்காக, அரசாங்கம் ரூபாய் 60 இலட்சத்திற்கும் அதிகமான நிதியை செலவிடுவதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

இதேவேளை மேற்படி விடயம் தொடர்பாக சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல பாராளுமன்றில் தெரிவித்ததாவது, சுகாதார அமைச்சின் நியதிகளுக்கு முரணாக வெளிநாடுகளுக்குச் செல்லும் வைத்தியர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படுவதுடன், கறுப்புப் பட்டியலில் சேர்க்கவும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்தார்.

Latest articles

Similar articles