2023ல் நீண்ட நேர மின்வெட்டு அபாயம்! – சுயாதீன பொறியியலாளர்கள் சங்கம்

2023 ஏப்ரல் மாதத்திற்கு முன்னர் இலங்கை மின்சார சபைக்கு போதியளவு நிலக்கரி கிடைக்காவிடின், 2023 ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்கள் மிக நீண்ட நேர மின்வெட்டு ஏற்படும் அபாயம் உள்ளதாக சுயாதீன பொறியியலாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

வரும் ஏப்ரல் மாதத்திற்குள் 60,000 (38 கப்பல்கள்) மெற்றிக்தொன் நிலக்கரி தேவைப்படுவதாகவும், இருப்பினும் இதுவரையில் 4 கப்பல்கள் மாத்திரமே வந்துள்ளதாகவும் சுயாதீன பொறியியலாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

இதன் காரணமாக அடுத்த வருடம் “இருண்ட ஜூலை”க்கு சாத்தியமுள்ளதாகவும் மேற்படி சங்கம் தெரிவித்துள்ளது.

Latest articles

Similar articles