தமிழ், முஸ்லிம் வீரர்களுக்கு இடமளியுங்கள் – மனோ கணேசன்

இலங்கை தேசிய விளையாட்டு அணிகளில் தமிழ், முஸ்லிம் வீரர்களுக்கு இடமளிக்க வேண்டுமென மனோ கணேசன் விளையாட்டுத் துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்கவிடம் வேண்டுகோள் விடுத்தார்.

பாராளுமன்றில் இடம்பெற்றுவரும் பட்ஜெட் விதாதங்களில், விளையாட்டுத் துறை நிதி ஒதுக்கீட்டு பிரேரணையின்போது மனோ கணேசன் மேற்குறிப்பிட்டவாறு வேண்டுகோள் விடுத்தார்.

தேசிய விளையாட்டு அணிகளில் தமிழ், முஸ்லிம் வீரர்களுக்கு விழும் “வெட்டுகளை” நிறுத்தும்படியும், கிரிக்கட் இந்நாட்டின் ஐந்தாம் மதம் எனவும் தெரிவித்த மனோ கணேசன், அரசியல்வாதிகள் நிலைநாட்டத் தவறிய இன ஒற்றுமைய, விளையாட்டுத் துறையின் மூலம் நிலைநாட்டும்படியும் விளையாட்டுத் துறை அமைச்சரிடம் வேண்டுகோள் விடுத்தார்.

மேலும், யாழ் புனித சம்பத்திரிசியார் கல்லூரி மற்றும் மன்னார் புனித சேவியர் கல்லூரி அணிகள் கொழும்பில் வந்து கால்பந்து இறுதிப் போட்டியில் விளையாடியமை ஒரு மகிழ்ச்சியான தருணம் எனவும் மனோ கணேசன் குறிப்பிட்டிருந்தார்.

Latest articles

Similar articles