முப்படைகளின் பிரதானியைக் கைதுசெய்ய போதுமான ஆதாரங்கள் உள்ளன

இலங்கை முப்படைகளின் பிரதானியான அட்மிரல் ரவீந்திர விஜயகுணவர்த்தனவை கைது செய்ய தேவையான ஆதாரங்கள் இருப்பதாக இலங்கை குற்றப்புலனாய்வுப் பிரிவினர் நீதிமன்றில் தெரிவித்துள்ளனர்.

மஹிந்த ஆட்சியின்போது கொழும்பில் 11 தமிழ் இளைஞர்களைக் கடத்ததி காணாமல் ஆக்கப்பட்ட சம்பவத்தின் முக்கிய குற்றவாளியான முன்னாள் கடற்படை சிப்பாய் சந்தன பிரசாத் ஹெட்டியாராச்சிக்கு அடைக்கலம் கொடுத்தமை தொடர்பாகவே போதுமான ஆதாரங்கள்

இருப்பதாக குற்றப்புலனாய்வுப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

முப்படைகளின் பிரதானியை  நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள போதிலும் இதுவரை அவர் நீதிமன்றத்தின் முன்னிலையில் ஆஜராகவில்லை என நீதவான் விசனம் தெரிவித்துள்ளார்.

Puthinam NEWS WhatsApp Channel

Latest articles

Similar articles