37 ஆண்டுகால ராபர்ட் முகாபே ஆட்சி முடிவுக்கு வருகிறது

ஜிம்பாவே நாட்டில் கடந்த 37ஆண்டுகளாக ஆட்சி புரிந்து கொண்டிருந்த அதிபர் ராபர்ட் முகாபே ஆட்சிக்கு எதிராக மக்கள் போராட்டம் நடத்தி வந்த நிலையில் கடந்த வாரம் அந்நாட்டு ராணுவம் திடீரென அதிபருக்கு எதிரான சில நடவடிக்கைகளை எடுத்தது.

இந்த நிலையில் அதிபர் ராபர்ட் முகாபே தனது சொந்த கட்சியான பிஎஃப் (PF) கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். அவரால் துணை அதிபர் பதவியில் இருந்து நீக்கப்பட்ட நன்காக்வா ஸானு என்பவர் புதிய தலைவராக பதவியேற்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Robert Mugabe
இதன் காரணமாக 37 ஆண்டுகால ராபர்ட் முகாபே ஆட்சி முடிவுக்கு வருகிறது. பிஎப் (PF) கட்சியின் புதிய தலைவர் விரைவில் ஜிம்பாவே நாட்டின் அதிபராக பதவியேற்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 

Latest articles

Similar articles