உக்ரேனிய ஜனாதிபதியுடன் அமெரிக்கா தொடர்ந்தும் தொடர்பில்

உக்ரேனிய ஜனாதிபதி வொலொடிமெர் ஸெலென்ஸ்கியுடன் அமெரிக்கா தொடர்ந்தும் தொடர்பில் உள்ளதக CNN தகவல் வெளியிட்டுள்ளது.

ரஷ்ய ஆக்கிரமிப்பிற்கு முன்னரே உக்ரேனிய ஜனாதிபதிக்கு அமெரிக்கா விசேட செய்மதித் தொலைபேசி ஒன்றை வழங்கியுள்ளது. மிகவும் பாதுகாப்பானதும், நவீனமயமானதுமான இந்த செய்மதி தொலைபேசி மூலம் உக்ரேனிய ஜனாதிபதி, அமெரிக்க ஜனாதிபதியுடன் கடந்த செவ்வாய்க்கிழமை தொடர்புகொண்டு பேசியுள்ளார்.

உக்ரேனிய வெளிவிவகார அமைச்சருக்கும் அதே போன்ற செய்மதி தொலைபேசி ஒன்று வழங்கப்பட்டுள்ளது. அமெரிக்கா உக்ரேனிய தலைநகர் கிவ்விலிருந்து வெளியேற முன்னர் மேற்படி செய்மதி தொலைபேசிகளை உக்ரேனுக்கு வழங்கியுள்ளது.

இதேவேளை நாட்டைவிட்டு வெளியேற மாட்டேன் என உறுதியெடுத்துள்ள உக்ரேனிய ஜனாதிபதி, தலைநகர் கிவ்வில் கடும் பாதுகாப்புடன் தனது இருப்பிடங்களை மாற்றி மாற்றி நகர்வுகளை மேற்கொண்டுவருகிறார்.

Puthinam NEWS WhatsApp Channel

Latest articles

Similar articles