லாஸ் ஏஞ்சல்ஸை நெருங்கும் கலிஃபோர்னியா காட்டுத்தீ

கடும் புகைமூட்டத்துடன் கொழுந்துவிட்டெரியும் காட்டுத்தீ, மிக வேகமாக அமெரிக்காவின் முக்கிய நகரங்களில் ஒன்றான லாஸ் ஏஞ்சல்ஸ் நகருக்கு அண்மையிலுள்ள பெல்-ஏர் பகுதியில் பரவிவருகிறது.

இவ் இடத்துக்கு அண்மையில் புராதன ரோமன் காலத்து சிலைகள் மற்றும் சித்திரங்களைக் கொண்ட கெட்டி (Getty) அருங்காட்சியகம் மற்றும் U.C.L.A பல்கலைக்கழகம் என்பன காணப்படுகின்றன.

​​புதன் கிழமைவரையில், 65,000 ஏக்கர் பரப்பளவில் எரிந்துகொண்டிருக்கும் தீயினால், 200,000 பேர் வரையில் இடம்பெயர்ந்துள்ளார்கள்.

மேலும்,

  • 300க்கும் மேற்பட்ட வீடுகள், வியாபார நிலையங்கள் என பல கட்டடங்கள் முற்றாக எரிந்து நாசமாகியுள்ளது.
  • கடும் தீயை அணைப்பதில் 1700க்கும் மேற்பட்ட தீயணைப்பு படையினர் ஈடுபட்டுள்ளனர்.
  • புகை மூட்டம் காரணமாக பிரதான மோட்டார் பாதை (freeway) 101 மூடப்பட்டுள்ளது.
  • வானில் காணப்படும் தடிப்பான புகை மூட்டம் காரணமாக நூற்றுக்கணக்கான பாடசாலைகள் மூடப்பட்டுள்ளன.

இந்த இயற்கை அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ விரும்பின், கீழ் காணப்படும் தொண்டு நிறுவனங்களின் உத்தியோகபூர்வ இணையத்தளத்திற்கு சென்று, நன்கொடைகளை வழங்கலாம்.

Latest articles

Similar articles