அமெரிக்காவில் அரச பணிகள் நிறுத்தம்

அமெரிக்காவில் புதிய வரவு செலவுத் திட்டம் செனட் சபையில் தோல்வியடைந்ததால், அரச பணிகள் நிறுத்தப்பட்டுள்ளது.

அடுத்த மாதம் வரை நிதி அளிப்பதை நீடிக்க பிரதிநிதிகள் அவையில் 230 வாக்குகள் ஆதரவாகவும், 197 வாக்குகள் எதிராகவும் பதிவானது. ஆனால், செனட் சபையில் 50 வாக்குகள் எதிராகவும் 49 வாக்குகள் ஆதரவாகவும் இருந்ததால் அங்கு மசோதா தோல்வியை சந்தித்தது.

நாடாளுமன்றம் நிதி ஒதுக்கவில்லை என்றால், அரச நிறுவனங்களை மூட வேண்டும் என்ற அமெரிக்க சட்டத்தின்படி பல அரச அலுவலகங்கள் மூடப்படும். இருப்பினும் அத்தியாவசிய சேவைகள் தொடர்ந்து இயங்கும்.

2013ல் இதுபோல அரச பணிகள் நிறுத்தப்பட்ட நிகழ்வு 16 நாள்கள் நடந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

 

Latest articles

Similar articles