கம்மன்பிலவின் கணக்கு

பாராளுமன்றில் சுயாதீனமாகச் செயற்படும் அணியினர் அரசாங்கத்திற்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஆதரவாக வாக்களிக்க முடிவு செய்துள்ளதாக முன்னாள் அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

தாம் 120 வாக்குகள் பெற்று பிரேரணையை நிறைவேற்றுவோம் என நம்பிக்கை வெளியிட்டுள்ள அவர், எவ்வாறு 120 உறுப்பினர்கள் பெறுவார்கள் என்பதை பின்வருமாறு விபரித்துள்ளார்.

120 உறுப்பினர்களின் விபரம்,
எதிரணி உறுப்பினர்கள் (SJB, TNA, JVP அடங்கலாக) : 65
அரசிலிருந்து பிரிந்த தனித்து செயற்படும் உறுப்பினர்கள் : 39
மைத்திரி அணி உறுப்பினர்கள் : 10
முஸ்லிம் உறுப்பினர்கள் (20க்கு ஆதரவளித்தவர்கள்) : 03
பொதுஜன பெரமுனவின் டலஸ் அணி : 03

இன்று(25/04) இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் கட்சியும் நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஆதரவாக வாக்களிக்கும் எனத் தெரிவித்திருந்தமையும் இங்கே குறிப்பிடத்தக்கது.

கம்பன்பிலவின் கணக்கு சரி வருமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.


Puthinam NEWS WhatsApp Channel

Latest articles

Similar articles