சீதுவையில் ஐந்து தமிழ் இளைஞர்கள் கைது, நால்வர் விடுதலை

இலங்கையின் சீதுவை பிரதேசத்தில் வாடகை வீட்டிலிருந்த ஐந்து தமிழ் இளைஞர்கள் கைது செய்யப்பட்டு நீதிமன்றி முன்னிலைப்படுத்தப்பட்டனர். இவர்களில் நால்வர் விடுவிக்கப்பட்டு, ஒருவரை மட்டும் காவல்துறை விசாரிக்க நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

இவர்கள் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டு என்னவெனில், ஜனாதிபதி கோத்தபாயவை அல்லது அவரது குடும்ப உறுப்பினர் எவரையாவது கொலை செய்வதாம் !!!! அவ்வாறு கொலை செய்தால், பாதுகாப்பாக வெளிநாடு சென்று தங்க வசதி செய்து தரப்படுமாம் என்பதேயாகும்.

பெரும்பாலான மக்கள் இந்த செய்தியை நம்பமாட்டார்கள். இருப்பினும் சிங்கள பேரினவாத அரசாங்கம்  சிறுபான்மையினரை கட்டுக்குள் வைத்திருக்க இப்படியான நாடகங்களை தொடர்ந்தும் அரங்கேற்றிக்கொண்டேயிருக்கும் என்பதை நாம் புரிந்துகொள்ளவேண்டும். வடக்கு, கிழக்கில் அல்லது நாட்டில் ஏதாவதொரு பகுதியில் இன்னும் சில, பல கைதுகளை நாம் எதிர்பார்க்கலாம்.

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபாலவை  கொலை செய்வது தொடர்பாக திட்டம்மிட்டார்கள் என இந்திய பிரஜை ஒருவரை கைது செய்திருந்தனர். அது தொடர்பாக எந்தவொரு முடிவும் இன்னும் காணப்படாத நிலையில் இப்போது இன்னொரு புது கதையை அவிழ்த்து விட்டுள்ளனர்.

மட்டக்களப்பில் காவலரணில் இருந்த காவல்துறை உறுப்பினர்களை இஸ்லாமிய தீவிரவாதிகள் கொலை செய்தபோதும், நல்லாட்சி அரசு முன்னாள் போராளி ஒருவரை கைது செய்திருந்தது. அதேபோல்  ஈஸ்டர் தின குண்டுத் தாக்குதலில் கொல்லப்பட்டவர்களில் பெரும்பாலானவர்கள் தமிழர்கள்.

மொத்தத்தில் இலங்கையில் தமிழர்களின் நிலை மிகவும் ஆபத்தான ஒரு நிலையை அடைந்துள்ளதையே இது போன்ற நிகழ்வுகள் கோடிட்டுக்காட்டுகின்றன.

Latest articles

Similar articles