தமிழ்நாட்டு மீனவர்கள் மீது இலங்கைக் கடற்படையினர் தாக்குதல் நடத்தியதைச் சுட்டிக்காட்டி, இலங்கைக் கடற்படை சர்வதேச சட்டங்களுக்குட்பட்டு செயல்படுவதை உறுதிசெய்யவும், இப்பிரச்சினைக்கு அரசியல்ரீதியான தீர்வுகாணவும் வலியுறுத்தி தமிழக முதல்வர் திரு மு.க.ஸ்ராலின் அவர்கள் இந்திய வெளிவிவகார அமைச்சருக்கு கடிதம் எழுதியுள்ளார்.
இலங்கை கடற்படையினரின் துப்பாக்கிச் சூட்டில் மீனவர் ஒருவர் தலையில் படுகாயமடைந்த நிலையில் சிகிச்சை பெற்றுவருவதாகவும், ஒன்பது மீனவர்கள் தாக்குதலில் இருந்து தப்பியதாகவும் குறிப்பிட்டுள்ள முதல்வர், இலங்கை அரசிற்கு அழுத்தம் கொடுத்து, தமிழக மீனவர் பிரச்சனைக்கு நீடித்த அரசியல் தீர்வையும் காணவேண்டுமெனவும் கேட்டுக்கொண்டுள்ளார்.
இந்திய மத்திய அரசையே மதிக்காத இலங்கை அரசு, இந்தியாவிற்கு எதிராக வெளிப்படையாகவே சீன அரசுடன் சேர்ந்து செயற்பட்டுவரும் இவ்வேளையில், தமிழக மீனவர்களின் பிரச்சனை தொடர்பாக எவ்வாறு கவனம் செலுத்தும்????
