இன்று (16/11) அதிகாலை தமிழ்நாட்டைக் கடந்த கஜா புயலால் இதுவரை 14பேர் உயிரிழந்துள்ளனர். நாகை, திருவாரூர், தஞ்சை உள்ளிட்ட பல மாவட்டங்களில் சேதம் அதிகமாகவுள்ளது.
15,000 இற்கும் அதிகமான மின்கம்பங்கள் சேதமடைந்துள்ளதால், மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது.
இழப்புகள், சேதவிபரங்கள் மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது.
தமிழ்நாடு பேரிடர் மேலாண்மை சிறப்பாக செயற்படுவதால், புயல் தாக்கிய பகுதிகளில் மீட்புப்பணிகள் விரைவாக நடைபெற்றுக்கொண்டு இருக்கிறது. வீதிகளில் முறிந்து விழுந்துள்ள மரங்கள் எல்லாம் உடனடியாக அகற்றப்படுகிறது.