இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகரான கோபால் பால்க்கேயை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கட்சித் தலைவர்கள் நேற்று (21/08) மாலை சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.
கூட்டமைப்பின் கட்சித் தலைவரான சம்பந்தன், டெலோ தலைவர் செல்வம் அடைக்கலநாதன், புளொட் தலைவர் சித்தார்த்தன், தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா மற்றும் கூட்டமைப்பின் பேச்சாளர் சுமந்திரன் ஆகியோர் இந்த கலந்துரையாடலில் பங்குபற்றியிருந்தனர்.
வழமைபோல் இந்தியா என்றும் தமிழருடன் துணை நிற்கும் என உறுதிமொழி வழங்கப்பட்டுள்ளது. பெளத்த மதத்தை முன்னிலைப்படுத்தி, சிங்கள மக்களின் பேராதரவைப் பெற்று வெற்றியீட்டியுள்ள இலங்கையின் தலைவர்களான ஜனாதிபதி மற்றும் பிரதமர், வரும்காலத்தில் சிறுபான்மையினரை எவ்வாறு நடத்தப்போகிறார்கள் என உலகமே பார்த்துக்கொண்டிருக்கிறது என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.