‘தமிழ் ஈழம் சிவக்கிறது’ புத்தகங்களை அழிக்க நீதிமன்றம் உத்தரவு

தமிழ் நாட்டைச் சேர்ந்த பழ நெடுமாறன் எழுதிய ‘தமிழ் ஈழம் சிவக்கிறது’ என்ற புத்தகங்களை அழிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

புத்தகத்தில் தமிழ் ஈழத்துக்கு ஆதரவாக கருத்துக்கள் மட்டுமின்றி இந்திய இறையாண்மைக்கு எதிரான கருத்துக்கள் இருந்ததாக குற்றஞ்சாட்டப்பட்டு கடந்த 2002ம் ஆண்டில் கைது செய்யப்பட்ட பழ நெடுமாறன், இந்த வழக்கில் இருந்து 2006ம் ஆண்டில் விடுதலை செய்யப்பட்டார்.

கைது செய்யப்படும்போது அவரிடம் இருந்த அனைத்துப் புத்தகங்களும் பறிமுதல் செய்யப்பட்டது. இருப்பினும் விடுதலையின்பின்னர் அந்த புத்தகங்களை அவரிடம் மீள கையளிக்கவில்லை.

இதனால் பறிமுதல் செய்யப்பட்ட புத்தகங்கள் திருப்பித் தரப்படவேண்டும் என மனு ஒன்றை சென்னை உயர் நீதிமன்றில் பழ நெடுமாறன் தாக்கல் செய்தார். இந்த மனுவை தள்ளுபடி செய்த நீதிமன்றம் சட்டவிதிமுறைகளின்படி பழ நெடுமாறனிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட புத்தகங்களை அழித்துவிடுமாறு உத்தரவிட்டுள்ளது.

Puthinam NEWS WhatsApp Channel

Latest articles

Similar articles