இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் கொலை வழக்கில் பழி சுமத்தப்பட்டு, 32 ஆண்டுகளுக்கும் மேலாக சிறைவாசம் அனுபவித்த நளினி, முருகன், ரவிச்சந்திரன், சாந்தன், ஜெயக்குமார் மற்றும் ராபர்ட் பயஸ் ஆகியோரை இந்திய உயர் நீதிமன்றம் விடுவித்துள்ளது.
இந்திய உயர் மட்ட அரசியல்வாதிகளின் குரூர அரசியல் விளையாட்டில் சிக்கி, முறையான சாட்சிகள் இன்றி போலியான சாட்சிகளின் மூலம் மரண தண்டனை பெற்ற தமிழர்களான அறுவரும் தமது வாழ்க்கையின் பெரும் பாகத்தை சிறையிலேயே கழித்துள்ளனர்.
இவர்களுக்கு வழங்கப்பட்ட மரண தண்டனை சில காலத்திற்கு முன்னர் நீதிமன்றத்தினால் ஆயுள் தண்டனையாகக் குறைக்கப்பட்டிருந்தது. இதனால் இவர்கள் தம்மை விடுதலை செய்யும்படி உயர் நீதிமன்றில் வழக்கு தொடர்ந வழக்கிலேயே உயர் நீதிமன்றம் இவர்களை விடுவித்துள்ளது.
இவர்களுடன் கைது செய்யப்பட்டிருந்த பேரறிவாளன் இந்த வருடம் மே மாதம் இந்திய உயர் நீதிமன்றத்தினால் விடுவிக்கப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.