இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் கொலை வழக்கில் 30 ஆண்டுகளுக்கு மேலாக சிறை தண்டனை அனுபவித்து வந்த பேரறிவாளனை இந்திய உச்ச நீதிமன்றம் விடுவித்துள்ளது.
இந்த வழக்கில், அமைச்சரவையின் தீர்மானம் தொடர்பாக தமிழக ஆளுநர் முடிவெடுக்கத் தவறியது தவறு எனவும் சுட்டிக்காட்டிய உச்ச நீதிமன்றம், தனக்குரிய அதிகாரத்தைப் பயன்படுத்தி பேரறிவாளனை விடுதலை செய்தது.
பேரறிவாளன் வழக்கு தொடர்பாக, தமிழக அரசு சார்பில் எழுத்துப்பூர்வமான வாதங்களை தாக்கல் செய்தது. அதில், ” பேரறிவாளனை விடுதலை செய்வதற்கான உரிய உத்தரவைப் பிறப்பிக்க வேண்டும். ஆளுநரின் சிறப்பு அதிகாரமான 161-ன் கீழ் முடிவெடுக்க எந்த தடையும் இல்லை. பேரறிவாளன் வழக்கில் விசாரணை வரம்பு தமிழக எல்லையில் உள்ளதால் முடிவெடுக்க வேண்டிய அதிகாரமும் மாநில அரசுக்கே உள்ளது” எனக் தெரிவிக்கப்பட்டிருந்தது.
பேரறிவாளன் விடுதலையை பலர் இனிப்புகள் பகிர்ந்து கொண்டாடி வருகின்றனர்.